ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு
"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை
வீரன் அழகு முத்துக்கோன்
முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்
ஆயர் குல சித்தர்கள்
இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்
திரு.சிவத்தசாமி
அழகு முத்துக்கோன் வாரிசு
செஞ்சி கோட்டை
செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்
Friday, August 30, 2013
திரு. R.S ராஜகண்ணப்பன்
திரு.ராஜகண்ணப்பன் தமிழக யாதவ சமுகத்தில் மிக முக்கியமான தலைவரக்களில் ஒருவர். இவர் அமைச்சராக இருந்த போதுதான் யாதவர் சமுகம் மிக பெரிய அரசியல் விழிப்புணர்ச்சி அடைந்தது.இந்த காலகட்டத்தில் தான் வீரன் அழகுமுத்துகோன் சிலை சென்னை எக்மோர் இரயில் நிலையம்முன்பு அப்போதைய தமிழக முதலமைச்சர் செல்வி.ஜெ ஜெயலலீதா திறந்துவைத்தார் இந்த நிகழ்ச்சியில் சுமார் 7 லட்சம் யாதவர்கள் கலந்துகொண்டார்கள் அந்த விழாவில் பேசிய முதலமைச்சர் கட்டலாங்குலத்தில் வீரன் அழகுமுத்துகோன் சிலை அரசு சார்பில் அமைக்கப்பட்டும் மேலும் வீரன் அழகுமுத்து கோன் குருபூஜை அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவித்தார்.மேலும்இவரது முயற்ச்சியால் இந்த காலத்தில் அழகுமுத்து கோனார் பெயரில் அரசு போக்குவரத்து கழகம் பேருந்துகளை இயக்கியது(veeran Azagumthu kone transport corparation)
பின்னர் கருத்து வேறுபாட்டின் காரணமாக அதிமுகவில் இருந்து விலகி தமிழ்நாடு யாதவ மகாசபை ஆதரவுடன் மக்கள் தமிழ் தேசம் கட்சி
என்ற அரசியல் கட்சி தொடங்கினார் இந்த கட்சிக்கு யாதவ மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
தட்டச்சு வேலை
தாமோதரன் யாதவ்,திருவண்ணாமலை
Thursday, August 29, 2013
ஐயம்பெருமாள் கோனார்-கோனார் தமிழ் உரை
திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்த ஐயம்பெருமாள்
கோனார் பள்ளிப் பாடநூல்களில் தமிழ் பாடநூல்களுக்கான கையேடுகளை உருவாக்கி வெளியிட்டு வந்தார். இந்த கையேடுகளை கோனார் தமிழ் உரை என்ற பெயரில் சென்னை, பழனியப்பா பிரதர்ஸ் நூல் வெளியீட்டு நிறுவனம் இன்றும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. பழனியப்பா பிரதர்ஸ் நிறுவனத்தின் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ள கட்டிடத்திற்கு இன்றும் "கோனார் மாளிகை" என்றுதான் பெயர்.
கோனார் தமிழ் உரை என்பது தமிழ்நாட்டுப் பாட நூல் கழகம் வெளியிடும் தமிழ் பாட நூல்களை புரிந்து கொள்ள உதவும் வகையில், தனியார் நிறுவனம் ஒன்று வெளியிடும் வழிகாட்டி கையேடு ஆகும். வேறு பல நிறுவனங்கள் வெளியிடும் கையேடுகளும் புழக்கத்தில் இருந்தாலும், அதிகமானவர்கள் அறிந்த வழிகாட்டி உரை நூலாக கோனார் தமிழ் உரை விளங்குகிறது.
கவியரசு வேகடாசலம் பிள்ளை-மே.வீ. வேணுகோபாலப்பிள்ளை-கார்மேகக் கோனார்-அய்யம்பெருமாள் கோனார்.
கவியரசு வேகடாசலம் பிள்ளை:
தமிழகத்தின் பெரும்புலவர். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் காவலராக இருந்து இவர் ஆற்றிய பெரும்பணி மறக்க முடியாதது.
மே.வீ. வேணுகோபாலப்பிள்ளை:
இளைய தலைமுறையினரால் இலக்கணத் தாத்தா என்று அழைக்கப்பட்டவர். சங்க இலக்கியங்களிலும் காப்பியங்களிலும் இலக்கணங்களிலும் வித்தகராக விளங்கியவ்ர்.
கார்மேகக் கோனார்:
தமிழன்னை ஈன்ற தனிப்பெருந்தமிழறிஞர் கார்மேகக் கோனார் நல்லிசைப் புலவர்கள், கண்ணகி தேவி, ஆபுத்திரன் வரலாறு உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சி நூல்களை எழுதி வெளியிட்டவர். பள்ளி, கல்லூரிகளில் தமிழையும் தமிழாசிரியர்களையும் துச்சமாக மதித்து வந்தவர்கள் மத்தியில் தமிழுக்கும் தமிழாசிரியர்களுக்கும் உரிய மரியாதையை வாங்கிக் கொடுத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். பள்ளி, கல்லூரிகளுக்கு உரிய நூல்களை வெளியிட்டு சிறப்பு செய்தவர். மாணவர்களிடையே தமிழார்வத்தை வளர்க்கவும் நூல்களை மலிவுவிலையில் கிடைக்கவும் செய்தவர். கோனார் நோட்ஸ் வெளியிட்டு தமிழகம் முழுதும் கல்வியில் புதுவடிவத்தையும் எளிமையையும் ஏற்படுத்தியவர் இவரே
தமிழகத்தின் பெரும்புலவர். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் காவலராக இருந்து இவர் ஆற்றிய பெரும்பணி மறக்க முடியாதது.
மே.வீ. வேணுகோபாலப்பிள்ளை:
இளைய தலைமுறையினரால் இலக்கணத் தாத்தா என்று அழைக்கப்பட்டவர். சங்க இலக்கியங்களிலும் காப்பியங்களிலும் இலக்கணங்களிலும் வித்தகராக விளங்கியவ்ர்.
கார்மேகக் கோனார்:
தமிழன்னை ஈன்ற தனிப்பெருந்தமிழறிஞர் கார்மேகக் கோனார் நல்லிசைப் புலவர்கள், கண்ணகி தேவி, ஆபுத்திரன் வரலாறு உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சி நூல்களை எழுதி வெளியிட்டவர். பள்ளி, கல்லூரிகளில் தமிழையும் தமிழாசிரியர்களையும் துச்சமாக மதித்து வந்தவர்கள் மத்தியில் தமிழுக்கும் தமிழாசிரியர்களுக்கும் உரிய மரியாதையை வாங்கிக் கொடுத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். பள்ளி, கல்லூரிகளுக்கு உரிய நூல்களை வெளியிட்டு சிறப்பு செய்தவர். மாணவர்களிடையே தமிழார்வத்தை வளர்க்கவும் நூல்களை மலிவுவிலையில் கிடைக்கவும் செய்தவர். கோனார் நோட்ஸ் வெளியிட்டு தமிழகம் முழுதும் கல்வியில் புதுவடிவத்தையும் எளிமையையும் ஏற்படுத்தியவர் இவரே
அய்யம்பெருமாள் கோனார்.
கோனார் உரை’யை உருவாக்கித் தந்து தமிழக மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கல்வியில் பேருதவியாக இருந்தவர்
அரங்கண்ணல்:
அண்ணாவின் நண்பரும் குடிசை மாற்று வாரியத் தலைவராகவும் இருந்து ஏழைகளுக்கு உதவிய ர்
கொங்கு மண்டல வரலாறு எழுதிய முத்துசாமிக் கோனார்
தி. அ. முத்துசாமிக் கோனார் (1858-1944) நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த தமிழறிஞர். அர்த்தநாரிக் கோனார், காத்தாய் அம்மாள் ஆகியோர் இவரது பெற்றோர். திண்ணைப் பள்ளிக்கூடம் நடத்திய பொன்னைய உபாத்தியாயரிடம் தமிழ் கற்றார். பிஜேஜய உபாத்தியாயரிடம் தெலுங்கும் வடமொழியும்கற்றார்.இசை, சமயக் கல்வி ஆகியவற்றிலும் நல்ல புலமை பெற்றவர். யாழ்ப்பாணம் மேலைப்புலோலி கதிரைவேற் பிள்ளையிடம் அஷ்டாவதானம் கற்றார். பலதுறைப் புலமை உடைய இவர் திருச்செங்கோடு மலைக்குப் படி அமைக்கும் பணியைச் செய்து கொண்டிருந்தவர். படி மேஸ்திரியாகவும் வேலை செய்துள்ளார். படிப்படியாக இலக்கியத்துறையில் நுழைந்த இவர் பல நூல்களைப் பதிப்பித்துள்ளார். 'திருச்செங்கோட்டு விவேகதிவாகரன்' என்னும் இதழை நடத்தினார். 'கொங்கு வேள்', 'கொங்கு மண்டலம்' ஆகியவையும் இவர் நடத்திய இதழ்கள். 'கொங்கு நாடு' என்னும் தலைப்பில் முதன்முதலாகக் கொங்கு நாட்டு வரலாறு எழுதியவர் இவர். 'கார்மேகக் கவிஞர்' எழுதிய 'கொங்கு மண்டல சதகம்' நூலை ஓலைச்சுவடியில் இருந்து அச்சில் பதிப்பித்ததோடு அந்நூலுக்கு விரிவான உரை எழுதியுள்ளார்.
"ஊர்பலவும் ஆண்டுகளாய் ஓடிஉழைத்து
உரைகண்டே ஊன்றும் அச்சுத்
தேர்புகுத்தித் தமிழருக்குச் சிறப்பாக
விருந்தளித்த செல்வன்"
என்று பாராட்டி உள்ளார்
திருச்செங்கோட்டைப் பற்றிய பல இலக்கியங்களைப் பதிப்பித்துள்ளார் இவர்.
அவை வருமாறு:
- .திருச்செங்கோட்டு மாலை
- பணிமலைக் காவலர் அபிஷேக மாலை
- திருச்செங்கோட்டுத் திருப்பணி மாலை
- செங்கோட்டுக் குமரர் இரட்டை மணிமாலை
- அர்த்தநாரீசுர மாலை
- சந்திரசேகர மாலை
- கருணாகர மாலை
- திருச்செங்கோட்டுப் புராணம்
- திருச்செங்கோட்டு மான்மியம்
- அர்த்தநாரீசுவரர் பதிகம்
- கருணாகரப் பதிகம்
- அர்த்தநாரீசுவரர் வருகைப் பதிகம்
- உமைபாகப் பதிகம்
- பணிமலைக் காவலர் பதிகம்
- திருச்செங்கோட்டுக் கலம்பகம்
- திருச்செங்கோட்டுப் பிள்ளைத் தமிழ்
- அர்த்தநாரீசுவரர் கும்மி
- அர்த்தநாரீசுவரர் முளைக்கொட்டுப் பாட்டு
- திருமுக விலாசம்
- திருச்செங்கோட்டுச் சதகம்
- நாரிகணபதி ஒருபா ஒருபஃது
- திருச்செங்கோட்டு ஊசல்
- திருச்செங்கோட்டு மும்மணிக்கோவை
- செங்கோட்டு வேலவர் பஞ்சாமிர்தம்
- அர்த்தசிவாம்பிகை நவகம்
ஆனந்தரங்கர்
பதினெட்டாம் நூற்றாண்டில் தென்னிந்திய வரலாற்றை உலகுக்கு எடுத்துக் கூறிய ஒரு அரசியல் ஞானியை ஈன்று உதவியதும் யாதவர் சமூகம்தான். வரலாறு எழுதுவது என்பது வேறு. வரலாறாக வாழ்வது என்பது வேறு. இந்த இரண்டையுமே செய்தவர்தான் புதுச்சேரியை சேர்ந்த நாட்குறிப்பு வேந்தர் ஆனந்தரங்கர் (அதாவது டோண்டு ராகவனது சக ஃபிரெஞ்சு-தமிழ் துபாஷி).
அவர் மட்டும் நமக்கு கிடைக்காமல் போயிருந்தால் 18-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த ஒரு முழுமையான தமிழக வரலாறு நமக்குக் கிடைக்காமலே போயிருந்திருக்கும்.
சென்னை-பெரம்பூரில் பிறந்த ஆனந்தரங்கர், ஒரு சாதாரண பாக்குக் கிடங்கு ஒன்றின் உரிமையாளராகத்தான் தன் வாழ்க்கையைத் துவங்கினார். புதுச்சேரி பிரெஞ்சு ஆளுநர் ட்யூப்ளேயின் மொழி பெயர்ப்பாளராகி (துபாஷி) அரசியல் உலகில் முதன்மையும் முன்னுரிமையையும் பெற்றார். இந்தக் காலத்தில் அவர் எழுதிய நாட்குறிப்புகள்தான் இன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன.
சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் பிள்ளை
மகாத்மா காந்தியின் தலைமையின் கீழ் இந்திய நாட்டின் விடுதலைக்காகப் போராடியவர் சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் பிள்ளை. 33 வயதில் சென்னை மக்களுக்கு பல வழிகளில் உயர்வு கொடுத்தவர் இவரே. இவர் மேயராக இருந்த காலத்தில்தான் சென்னை தமிழ் நாட்டுக்கே சொந்தம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை சென்னை மாநகராட்சி நிறைவேற்றி அதில் வெற்றியும் கண்டது. இவரது காலத்தைத்தான் ‘மாநகராட்சியின் பொற்காலம்’ என போற்றுகிறார்கள்.
‘தமிழர் வீரம்’’தமிழ் வளர்த்த கோயில்கள்’, ‘போர்க்காவியம்’ உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி தமிழ் இலக்கிய உலகுக்கு அணி சேர்த்தவர் மேயர் ராதாகிருஷ்ணப்பிள்ளை.
சென்னைக்கு குடிநீர் தரும் பூண்டி ஏரியை உருவாக்கியவர் ராதாகிருஷ்ணன் பிள்ளை. எதுவும் அற்ற ஏழைகள் அவரால் பயனடைந்துள்ளனர். தமிழகத்தின் தலைநகரமாக சென்னை இருக்க அடித்தளமாக இருந்தவர். இன்றைய சென்னை மாநகராட்சி வளர்ச்சிக்கு அன்றைக்கே வித்திட்டவர் ராதாகிருஷ்ணன் பிள்ளை. மாநகராட்சியின் 10 ஆண்டு சாதனையை ஒரே ஆண்டில் நிறைவேற்றியவர்.
Tuesday, August 27, 2013
கிருஷ்ண ஜெயந்தி
கிருஷ்ண ஜெயந்தி ஆண்டுதோறும் கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடுகிற இந்துசமய விழாவாகும். ஆவணி மாதத்தில் தேய்பிறையின் எட்டாம் நிலையில் (அட்டமி)ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாள் இவ்விழா நிகழ்கிறது. கிரெகொரியின் நாட்காட்டியின் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுகிறார்கள். கோகுலாஷ்டமி என்று தென்னிந்தியாவிலும், அஷ்டமி ரோகிணி என்றுகேரளாவிலும் போன்ற பெயர்களாலும் இவ்விழா குறிக்கப்படுகிறது.
இந்தியாவின் பல பகுதிகளில் பல்வேறு வகைகளில் இவ்விழா கொண்டாடப் படுகிறது.
தென்னிந்தியாவில்
தென்னிந்தியாவில் ஸ்ரீஜெயந்தி,ஜென்மாஷ்டமி,கோகுலாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது.தமிழ்நாட்டில், குறிப்பாக, யாதவர்கள், செட்டியார்கள், பிள்ளைமார் மற்றும் பிராமிணர்கள் இவ்விழாவினைக் கொண்டாடுகின்றனர்.தற்காலத்தில் தேரோட்டம் மற்றும் உறியடி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
கிருட்டிணன் நடுநிசியில் பிறந்ததாகக் கருதப்படுவதால் பூசைகள் மாலை நேரத்தில் நடத்தப்படுகின்றன. கண்ணன் சிறு பிள்ளையாக வீட்டிற்கு வருவது போன்று கால்தடங்கள் வீட்டின் வாயிலிலிருந்து பூசையறை வரை இடப்பட்டு குழந்தைகளுக்குரிய சீடை,முறுக்கு போன்ற தின்பண்டங்கள் படைக்கப்படுகின்றன.
முன்பு, கிருஷ்ண ஜெயந்தியின் போது மஞ்சத் தண்ணீர் ஊற்றுவது இவர்களிடையே பிரசித்தம். முறை மாப்பிள்ளை, மாமன், மச்சான், முறைப்பெண் ஆகியோட் மீது மஞ்சள் தண்ணீர் ஊற்றி மகிழ்கிறார்கள்
வட இந்தியாவில்
ராச லீலா மற்றும் தகி அண்டி (தயிர்க் கலசம்) என வட இந்தியாவில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ராசலீலா என்பது கிருட்டிணனின் இளமைக்கால வாழ்வை, கோகுலத்தில் கோபியர்கள் எனப்படும் இளம்பெண்களுடன் விளையாடிய காதல் விளையாட்டுக்களை நடிப்பதாகும்.மகாராட்டிரத்தில் பிரபலமாக உள்ள தகி அண்டி என்பது உயரத்தில் தொங்க விடப்பட்டுள்ள வெண்ணைத்தாழியை சிறுவர்கள் (கோவிந்தாக்கள்) நாற்கூம்பு (பிரமிடு)அமைத்து மேலேறி அதனை உடைப்பதாகும். அரசியல்கட்சிகளும் வணிக நிறுவனங்களும் புரவல் நல்கும் இவ்விழாக்களில் வெண்ணைத்தாழியை அடைந்தவர்களுக்கு பெரும் நிதிப் பரிசுக்கள் அறிவிக்கப்படுகின்றன. இவ்வாறு கோவிந்தாக்கள் கூம்பின் மேலேறும்போது தண்ணீர் அடித்து அவர்களை ஏறவிடாது தடுப்பதும் விளையாட்டை ஆர்வமிக்கதாக ஆக்குகிறது[