Tuesday, August 27, 2013
Home »
» கிருஷ்ண ஜெயந்தி
கிருஷ்ண ஜெயந்தி
கிருஷ்ண ஜெயந்தி ஆண்டுதோறும் கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடுகிற இந்துசமய விழாவாகும். ஆவணி மாதத்தில் தேய்பிறையின் எட்டாம் நிலையில் (அட்டமி)ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாள் இவ்விழா நிகழ்கிறது. கிரெகொரியின் நாட்காட்டியின் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுகிறார்கள். கோகுலாஷ்டமி என்று தென்னிந்தியாவிலும், அஷ்டமி ரோகிணி என்றுகேரளாவிலும் போன்ற பெயர்களாலும் இவ்விழா குறிக்கப்படுகிறது.
இந்தியாவின் பல பகுதிகளில் பல்வேறு வகைகளில் இவ்விழா கொண்டாடப் படுகிறது.
தென்னிந்தியாவில் ஸ்ரீஜெயந்தி,ஜென்மாஷ்டமி,கோகுலாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது.தமிழ்நாட்டில், குறிப்பாக, யாதவர்கள், செட்டியார்கள், பிள்ளைமார் மற்றும் பிராமிணர்கள் இவ்விழாவினைக் கொண்டாடுகின்றனர்.தற்காலத்தில் தேரோட்டம் மற்றும் உறியடி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
கிருட்டிணன் நடுநிசியில் பிறந்ததாகக் கருதப்படுவதால் பூசைகள் மாலை நேரத்தில் நடத்தப்படுகின்றன. கண்ணன் சிறு பிள்ளையாக வீட்டிற்கு வருவது போன்று கால்தடங்கள் வீட்டின் வாயிலிலிருந்து பூசையறை வரை இடப்பட்டு குழந்தைகளுக்குரிய சீடை,முறுக்கு போன்ற தின்பண்டங்கள் படைக்கப்படுகின்றன.
முன்பு, கிருஷ்ண ஜெயந்தியின் போது மஞ்சத் தண்ணீர் ஊற்றுவது இவர்களிடையே பிரசித்தம். முறை மாப்பிள்ளை, மாமன், மச்சான், முறைப்பெண் ஆகியோட் மீது மஞ்சள் தண்ணீர் ஊற்றி மகிழ்கிறார்கள்
ராச லீலா மற்றும் தகி அண்டி (தயிர்க் கலசம்) என வட இந்தியாவில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ராசலீலா என்பது கிருட்டிணனின் இளமைக்கால வாழ்வை, கோகுலத்தில் கோபியர்கள் எனப்படும் இளம்பெண்களுடன் விளையாடிய காதல் விளையாட்டுக்களை நடிப்பதாகும்.மகாராட்டிரத்தில் பிரபலமாக உள்ள தகி அண்டி என்பது உயரத்தில் தொங்க விடப்பட்டுள்ள வெண்ணைத்தாழியை சிறுவர்கள் (கோவிந்தாக்கள்) நாற்கூம்பு (பிரமிடு)அமைத்து மேலேறி அதனை உடைப்பதாகும். அரசியல்கட்சிகளும் வணிக நிறுவனங்களும் புரவல் நல்கும் இவ்விழாக்களில் வெண்ணைத்தாழியை அடைந்தவர்களுக்கு பெரும் நிதிப் பரிசுக்கள் அறிவிக்கப்படுகின்றன. இவ்வாறு கோவிந்தாக்கள் கூம்பின் மேலேறும்போது தண்ணீர் அடித்து அவர்களை ஏறவிடாது தடுப்பதும் விளையாட்டை ஆர்வமிக்கதாக ஆக்குகிறது[
Related Posts:
அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் விழா; பா.மு.க., தலைவர் பங்கேற்பு வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் விழா, அவரது பிறந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், கட்டாலங்குளத்தில் உள்ள அவரது நினைவு மண்டபத்தில் நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ம.ரவிக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர்… Read More
யாதவர் தன்னுரிமைப் பணியகம் சார்பில் அழகுமுத்துக்கோன் நினைவு மணடபத்தில் வரலாற்று பதிவுகள் வைக்க ஏற்பாடு பெருமை மிகு உறவுகளுக்கு வணக்கம் ஆக்கப்பூர்வமான தொடர் பணியில் - யாதவர் தன்னுரிமைப் பணியகம் கட்டாலங்குளம் அழகுமுத்துக்கோன் நினைவு மணடபத்தில் வரலாற்று பதிவுகள் இல்லை என்பதை பலமுறை குறிப்பிட்டு இருந்தோம், அதனை தொடர்ந்து 11/07… Read More
தமிழ்நாட்டு இடையன்களின் கிளைகள் 1.கரிகாலன் இடையன் 2.புதுநாட்டு இடையன் 3.சிவத்த இடையன் 4.கருத்த இடையன் 5.கல்லுகட்டி இடையன் 6.சாம்பார் இடையன் 7.அப்பச்சி இடையன் 8.செம்பலங்குடி இடையன் 9.தெலுங்கு இடையன் 10.உள்நாட்டு இடையன் 11.அரசன் கிளை இடையன் 12.வருதாட்டு இடைய… Read More
மதுரை - "யாதவர் தன்னுரிமைப் பணியகம்" அலுவலகத்தை தமிழ்நாடு யாதவா மகா சபை தலைவர் அய்யா "கோபாலகிருஷ்ணன்" அவர்கள் பார்வையிட்டார்கள் மதுரை - "யாதவர் தன்னுரிமைப் பணியகம்" அலுவலகத்தை தமிழ்நாடு யாதவா மகா சபை தலைவர் அய்யா "கோபாலகிருஷ்ணன்" அவர்கள் பார்வையிட்டார்கள். பணியகத்தின் அனைத்து பணிகளையும் பார்த்து பாராட்டி அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்கள், இன்னும… Read More
அல்வா கூட கிடைக்காது: லல்லு பிரசாத் யாதவ் கிண்டல் வெளிநாட்டு முதலீட்டாளர்களால் இந்திய மக்களுக்கு அல்வாகூட கிடைக்காது என்று ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லல்லு பிரசாத் யாதவ் கூறினார். இதுதொடர்பாக ராஞ்சியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- ரெயில்வே மற்றும் ப… Read More
0 comments:
Post a Comment