"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Thursday, August 29, 2013

கொங்கு மண்டல வரலாறு எழுதிய முத்துசாமிக் கோனார்

தி. அ. முத்துசாமிக் கோனார் (1858-1944நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த தமிழறிஞர். அர்த்தநாரிக் கோனார், காத்தாய் அம்மாள் ஆகியோர் இவரது பெற்றோர். திண்ணைப் பள்ளிக்கூடம் நடத்திய பொன்னைய உபாத்தியாயரிடம் தமிழ் கற்றார். பிஜேஜய உபாத்தியாயரிடம் தெலுங்கும் வடமொழியும்கற்றார்.இசை, சமயக் கல்வி ஆகியவற்றிலும் நல்ல புலமை பெற்றவர். யாழ்ப்பாணம் மேலைப்புலோலி கதிரைவேற் பிள்ளையிடம் அஷ்டாவதானம் கற்றார். பலதுறைப் புலமை உடைய இவர் திருச்செங்கோடு மலைக்குப் படி அமைக்கும் பணியைச் செய்து கொண்டிருந்தவர். படி மேஸ்திரியாகவும் வேலை செய்துள்ளார். படிப்படியாக இலக்கியத்துறையில் நுழைந்த இவர் பல நூல்களைப் பதிப்பித்துள்ளார். 'திருச்செங்கோட்டு விவேகதிவாகரன்' என்னும் இதழை நடத்தினார். 'கொங்கு வேள்', 'கொங்கு மண்டலம்' ஆகியவையும் இவர் நடத்திய இதழ்கள். 'கொங்கு நாடு' என்னும் தலைப்பில் முதன்முதலாகக் கொங்கு நாட்டு வரலாறு எழுதியவர் இவர். 'கார்மேகக் கவிஞர்' எழுதிய 'கொங்கு மண்டல சதகம்' நூலை ஓலைச்சுவடியில் இருந்து அச்சில் பதிப்பித்ததோடு அந்நூலுக்கு விரிவான உரை எழுதியுள்ளார்.

"ஊர்பலவும் ஆண்டுகளாய் ஓடிஉழைத்து
உரைகண்டே ஊன்றும் அச்சுத்
தேர்புகுத்தித் தமிழருக்குச் சிறப்பாக
விருந்தளித்த செல்வன்"
என்று பாராட்டி உள்ளார்

திருச்செங்கோட்டைப் பற்றிய பல இலக்கியங்களைப் பதிப்பித்துள்ளார் இவர்.
அவை வருமாறு:
  1. .திருச்செங்கோட்டு மாலை
  2. பணிமலைக் காவலர் அபிஷேக மாலை
  3. திருச்செங்கோட்டுத் திருப்பணி மாலை
  4. செங்கோட்டுக் குமரர் இரட்டை மணிமாலை
  5. அர்த்தநாரீசுர மாலை
  6. சந்திரசேகர மாலை
  7. கருணாகர மாலை
  8. திருச்செங்கோட்டுப் புராணம்
  9. திருச்செங்கோட்டு மான்மியம்
  10. அர்த்தநாரீசுவரர் பதிகம்
  11. கருணாகரப் பதிகம்
  12. அர்த்தநாரீசுவரர் வருகைப் பதிகம்
  13. உமைபாகப் பதிகம்
  14. பணிமலைக் காவலர் பதிகம்
  15. திருச்செங்கோட்டுக் கலம்பகம்
  16. திருச்செங்கோட்டுப் பிள்ளைத் தமிழ்
  17. அர்த்தநாரீசுவரர் கும்மி
  18. அர்த்தநாரீசுவரர் முளைக்கொட்டுப் பாட்டு
  19. திருமுக விலாசம்
  20. திருச்செங்கோட்டுச் சதகம்
  21. நாரிகணபதி ஒருபா ஒருபஃது
  22. திருச்செங்கோட்டு ஊசல்
  23. திருச்செங்கோட்டு மும்மணிக்கோவை
  24. செங்கோட்டு வேலவர் பஞ்சாமிர்தம்
  25. அர்த்தசிவாம்பிகை நவகம்





Related Posts:

  • திருமந்திரம் தந்த திருமூலவரின் கதை  திருமந்திரம் தந்த திருமூலவரின்கதை! திருவாவடுதுறை! இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் சிவனின் பெயர் பசுபதியார். சிவ வாகனமான நந்தியின் அருளைப் பெற்றவர்களில் சுந்தரநாதர் இவருக்குஅகத்தியரைக் கண்டு அவருடன் சில நாட்கள்… Read More
  • S. Balakrishnan S. Balakrishnan, also known as So. Balakrishnan (Tamil: சோ. பாலகிருஷ்ணன்) or So.Ba ( சோ.பா), was a veteran Indian politician, President of Tamil Nadu Congress Committee (TNCC) and Mem… Read More
  • பள்ளி, கல்லூரிகளில் மாணவியர்களுக்கு தற்காப்புக் கலை பயிற்சி: அகிலேஷ் யாதவ் உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் இன்று பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் மாணவியர்களுக்கு தற்காப்புக் கலை தொடங்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளார். உத்தரபிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. குற்… Read More
  • What is Lord Venkateshwara's caste? - Tv9 Read More
  • மாயோன் மாயோன் என்பவன் தமிழர்கள் வகுத்த ஐந்திணை நிலங்களில் முல்லை நிலத்தெய்வமாவான். பிற்பாடு இம்மாயோனை திருமால் என மாற்றியதாக ஆய்வாளர்கள் கூறுவர் திருமுருகாற்றுப்படை திருமுருகாற்றுப்படையில் முருகன் மாயோன… Read More

0 comments:

Post a Comment

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar