"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

யாதவர்:ஆயர்,இடையர்,கோன்,கோனார்

ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை

வீரன் அழகு முத்துக்கோன் வரலாறு

வீரன் அழகு முத்துக்கோன்

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்

ஆயர் குல சித்தர்கள்

ஆயர் குல சித்தர்கள்

இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

திரு.சிவத்தசாமி

அழகு முத்துக்கோன் வாரிசு

செஞ்சிக் கோட்டை கோனார் கோட்டை

செஞ்சி கோட்டை

செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்

 யாதவர்

ஆயர்களே ஆதி தமிழர்கள் - கோனார்களும் குமரிகண்டமும்

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)

 யாதவர்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் தபால்தலை மதுரையில் வெளியிடப்பட்டது. அவரது தபால் தலையை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

Friday, March 28, 2014

தமிழக சமாஜ்வாதி கட்சி முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு: 10 தொகுதிகளில் போட்டி


நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் முலாயம்சிங் யாதவ் தலைமையில் சமாஜ்வாதி கட்சி சார்பில் தமிழகத்தில் 10 தொகுதிகளில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. 7 தொகுதிகள் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை, அக்கட்சி மாநிலத் தலைவர் இளங்கோயாதவ் சிதம்பரத்தில் வியாழக்கிழமை வெளியிட்டுள்ளார்.

அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த போட்டி: தமிழகத்தில் 27 தொகுதிகளில் போட்டியிட பட்டியலை தேர்வு செய்து அகில இந்திய தலைவர் முலாயங்சிங் யாதவிற்கு அனுப்பினோம். அவர் தமிழகத்தில் கீழ்கண்ட 10 தொகுதிகளில் போட்டியிட அனுமதி வழங்கியுள்ளார். 7 தொகுதிகளுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளோம்.
விரைவில் 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். மேலும் தமிழகத்தில் இந்திய கம்யூ கட்சி தலைவர் தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி தலைவர் ராமகிருஷ்ணன் ஆகியோரை தேர்தல் பணிக்குழு சந்தித்து ஆதரவு கேட்டுள்ளார். வேட்புமணு தாக்கல் முடிவுற்றவுடன் பரிசீலனை செய்வதாக தெரிவித்துள்ளனர்.
எங்களுக்கு 10 தொகுதிகளில் ஆதரவு அளித்தால், மற்ற தொகுதிகளில் இடதுசாரி கட்சிகளை ஆதரிப்பது என முடிவு செய்துள்ளோம். தமிழகத்தில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளரை ஆதரித்து முலாயம்சிங் யாதவ், அகிலேஷ் யாதவ் ஆகியோர் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளனர் என இளங்கோயாதவ் தெரிவித்தார். பேட்டியின் போது மாநில விவசாய பிரிவு செயலாளர் வீரமணியாதவ், மாவட்டத் தலைவர் பி.மாரியப்பன், மாவட்ட இளைஞரணி செயலாளர் பி.ஜெயகாந்தன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

வேட்பாளர்கள் பட்டியல் விபரம்: பொள்ளாச்சி- மாலி.சதீஷ்யாதவ் (மாநில பொருளாளர்), ராமநாதபுரம்- வழக்குரைஞர் சபாபதி (மாநில துணைத் தலைவர்), மயிலாடுதுறை- வி.இளப்பன்யாதவ் (ஓய்வுபெற்ற உதவிஆட்சியர், மாநில அமைப்புச் செயலாளர்), தேனி- ஜி.கே.மீனாட்சிசுந்தரம் (தேனி மாவட்டத் தலைவர்), கரூர்- எம்.முருகேசன் (மாநில தொழிற்சங்க பிரிவு செயலாளர்), திருவண்ணாமலை- ஆதி.வெங்கடேசன் (மாநிலச் செயலாளர்), வேலூர்- என்.நந்தகுமார் (மாநில இளைஞரணி அணி செயலாளர்).

Wednesday, March 26, 2014

யாதவ மகாசபை(இந்திய மக்கள் கழகம்)வேட்பாளர் பட்டியல்

பெயர் கட்சி தொகுதி
தி.தேவநாதன் யாதவ் இந்திய மக்கள் கழகம் இந்திய மக்கள் கழகம்
தி.தேவநாதன் யாதவ் இந்திய மக்கள் கழகம் ராமநாதபுரம்
K.சீனுவாசன் இந்திய மக்கள் கழகம் ஸ்ரீபெரும்புதூர்
R.K விஜயகுமார் இந்திய மக்கள் கழகம் வடசென்னை
S.பாலு இந்திய மக்கள் கழகம் சிவகங்கை
k.பூபதி(எ) ராமன் இந்திய மக்கள் கழகம் பெரம்பலூர்
சீதலட்சுமி இந்திய மக்கள் கழகம் தூத்துக்குடி
T.கேசவன் இந்திய மக்கள் கழகம் தஞ்சாவூர்
T.பார்த்திபன் இந்திய மக்கள் கழகம் கோயம்பத்தூர்
K.பாண்டி இந்திய மக்கள் கழகம் தேனி
செல்வம்(எ)சந்தானகிருஷ்ணன் இந்திய மக்கள் கழகம் விருதுநகர்
T.ரவிந்திரன் இந்திய மக்கள் கழகம் திருவண்ணமலை

தட்டச்சு வேலை
      தாமோதரன் யாதவ்

அனுப்பியவர்

தாமோதரன் யாதவ்,திருவண்ணாமலை

Friday, March 21, 2014

மக்களவை தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் யாதவ வேட்பாளரகள்


தமிழகத்தில் இதுவரை அறிவிக்கபட்டுள்ள மக்களவை தேர்தலுக்கான யாதவ வேட்பாளரகள்
பெயர் கட்சி தொகுதி
திரு.கோபாலகிருஷ்ணன் அ தி மு க மதுரை
திரு.கே.எஸ். அழகிரி காங்கிரஸ் கடலூர்
திரு. நாசே R. ராஜேஷ் காங்கிரஸ் அரக்கோணம்
திரு.எஸ்.கிருஷ்ணன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சிவகங்கை
திரு. M.P.ராஜி யாதவ் யாதவர் எழுச்சி இயக்கம் நெல்லை
தி.தேவநாதன் யாதவ் இந்திய மக்கள் கழகம் நெல்லை
தி.தேவநாதன் யாதவ் இந்திய மக்கள் கழகம் ராமநாதபுரம்
K.சீனுவாசன் இந்திய மக்கள் கழகம் ஸ்ரீபெரும்புதூர்
R.K விஜயகுமார் இந்திய மக்கள் கழகம் வடசென்னை
S.பாலு இந்திய மக்கள் கழகம் சிவகங்கை
k.பூபதி(எ) ராமன் இந்திய மக்கள் கழகம் பெரம்பலூர்
சீதலட்சுமி இந்திய மக்கள் கழகம் தூத்துக்குடி
T.கேசவன் இந்திய மக்கள் கழகம் தஞ்சாவூர்
T.பார்த்திபன் இந்திய மக்கள் கழகம் கோயம்பத்தூர்
K.பாண்டி இந்திய மக்கள் கழகம் தேனி
செல்வம்(எ)சந்தானகிருஷ்ணன் இந்திய மக்கள் கழகம் விருதுநகர்
T.ரவிந்திரன் இந்திய மக்கள் கழகம் திருவண்ணமலை
மாலி.சதீஷ்யாதவ் சமாஜ்வாதி கட்சி பொள்ளாச்சி
வழக்குரைஞர் சபாபதி சமாஜ்வாதி கட்சி ராமநாதபுரம்
வி.இளப்பன்யாதவ் சமாஜ்வாதி கட்சி மயிலாடுதுறை
ஜி.கே.மீனாட்சிசுந்தரம் சமாஜ்வாதி கட்சி தேனி
எம்.முருகேசன் சமாஜ்வாதி கட்சி கரூர்
ஆதி.வெங்கடேசன் சமாஜ்வாதி கட்சி திருவண்ணாமலை
என்.நந்தகுமார் சமாஜ்வாதி கட்சி வேலூர்
பூமிராஜன் யாதவ் யாதவர் தேசிய பேரவை ராமநாதபுரம்
மணிவாசகம் யாதவ் யாதவர் தேசிய பேரவை சிவகங்கை
P.V பழனிகுமார் மதுரை யாதவர் தேசிய பேரவை விருதுநகர்
A.கரந்தமலைகண்ணன் யாதவ் யாதவர் தேசிய பேரவை மதுரை
யாதவர் வாக்கு யாதவர்கே

Monday, March 17, 2014

இந்திய மக்கள் கழகம், ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலியில் இந்திய மக்கள் கழகம், யாதவ மகாசபை நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது.
திருநெல்வேலியில் இந்திய மக்கள் கழகம், யாதவ மகாசபை நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி, தென்காசி மக்களவைத் தொகுதி நிர்வாகிகள் பங்கேற்ற இந்த கூட்டத்துக்கு கட்சியின் நிறுவனத் தலைவர் தேவநாதன்யாதவ் தலைமை வகித்து பேசுகையில், யாதவ மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டு எடுக்கும் வகையில் வரும் மக்களவைத் தேர்தலில் பணி ஆற்ற வேண்டும் என்று குறிப்பிட்டார்.

கூட்டத்தில், யாதவ மகாசபையின் தென்மண்டல தலைவர் கே. ராமகிருஷ்ணன், மாநில கொள்கைபரப்பு செயலர் கோமதிநாயகம், திருநெல்வேலி மாவட்ட பண்பாட்டுக் கழகத் தலைவர் சண்முகசுந்தரம், யாதவ மகாசபையின் பொருளாளர் பெருமாள், மேற்கு மாவட்டத் தலைவர் நம்பி, மாவட்டத் தலைவர் பேட்டை மாடசாமி,
மாவட்ட மகளிரணி செயலர் சசிகலா, நான்குனேரி பேரவைத் தொகுதி பொறுப்பாளர் ராமச்சந்திரன், கடையநல்லூர் பேரவைத் தொகுதி பொறுப்பாளர் தியாகராஜன் உள்பட பலர் பேசினர்.
திருநெல்வேலி, தென்காசி மக்களவைத் தொகுதியில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

உத்தரபிரதேசத்தில் ரூ.300 கோடியில் பிரமாண்ட கிருஷ்ணர் கோவில்; முதல்–மந்திரி அகிலேஷ் யாதவ் முன்னிலையில் கட்டுமான பணி தொடங்கியது

உத்தரபிரதேசத்தில் ரூ.300 கோடியில் பிரமாண்ட கிருஷ்ணர் கோவில் கட்டப்படுகிறது. இதற்கான பணி முதல்–மந்திரி அகிலேஷ் யாதவ் முன்னிலையில் தொடங்கியது
கிருஷ்ணர் கோவில்
உலகிலேயே உயரமான வழிபாட்டுத்தலமாக உத்தரபிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில், ‘பிருந்தாவனம் சந்திரோதய மந்திர்’ என்ற பெயரில் கிருஷ்ணர் கோவில் ஒன்று உருவாகிறது. 70 அடுக்குகளுடன், 231 மீட்டர் உயரத்தில் ரூ.300 கோடியில் இந்தக் கோவில் கட்டப்படுகிறது.
இந்த கோவில், கிருஷ்ணர் தனது இளம் பருவத்தை கழித்த பிருந்தாவனத்தை நினைவுகூர்வதாக அமையும்.
பணி தொடங்கியது
ஹோலி கொண்டாட்டத்துக்கு இடையே, மாநில முதல்–மந்திரி அகிலேஷ் யாதவ், மத்திய மந்திரி ராஜீவ் சுக்லா உள்ளிட்ட பிரபலங்கள் முன்னிலையில், இந்த கோவில் கட்டும் பணி நேற்று தொடங்கியது. இந்த கோவில் 5 ஆண்டுகளில் கட்டிமுடிக்கப்படும் என ‘இஸ்கான்’ (சர்வதேச கிருஷ்ண பக்தர்கள் அமைப்பு) தெரிவித்தது.
இந்த கோவில் கட்டும் பணியை நேற்று தொடங்கியது வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என அகிலேஷ் யாதவ் பெருமிதப்பட்டார். அப்போது அவர், ‘‘ஹோலி பண்டிகை கொண்டாடுகிற இந்த தருணத்தில், அன்பையும், மகிழ்ச்சியையும் பரப்புவதற்கு இந்த பணி நமக்கு ஊக்கம் அளிப்பதாக அமைந்துள்ளது. இந்தியா அதன் கலாச்சாரத்துக்கு, பன்முகத்தன்மைக்கு பெயர் பெற்றது. எண்ணற்ற மதங்களின் பிறப்பிடமாக இந்தியா அமைந்துள்ளது’’ என கூறினார்.
சிறப்பு அம்சங்கள்
இந்த கோவில் கட்டும் பணிக்கு மாநில அரசு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
இந்த கோவிலின் உச்சியில் நிறுவப்படுகிற டெலஸ்கோப் வழியாக பக்தர்கள் கிருஷ்ண ஜென்ம பூமியையும், தாஜ்மகாலையும் கண்டுகளிக்க முடியும்.
கோவில் வளாகத்தில் முக்கிய பிரமுகர்கள் ஹெலிகாப்டர்களில் வந்திறங்க ஏற்ற விதத்தில் ஹெலிகாப்டர் தளமும் அமைக்கப்படுகிறது. பக்தர்கள் தங்குமிடமும் கட்டப்படுகிறது. ஆண்டு முழுவதும் ஆன்மிக விழாக்களுக்கும் இங்கு பஞ்சம் இருக்காது.

Thursday, March 13, 2014

மக்களவைத் தேர்தலில் இந்திய மக்கள் கழகம் போட்டி

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இந்திய மக்கள் கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டம் சனிக்கிழமை சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு யாதவ மகாசபை மாவட்டத்  தலைவர் பாலு தலைமை தாங்கினார். யாதவ மகாசபை நிறுவனரும் இந்திய மக்கள் கழகத்தின் தலைவருமான தேவநாதன் யாதவ் இக் கூட்டத்தில் பங்கேற்று பேசும் போது, பாரதீய ஜனதா கூட்டணியில் இணைய வேண்டும் என என்னை நமது சமுதாயத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இந்த அணியில் ஒரு தொகுதிக்காக கூட்டணி வைக்க நான் விரும்பவில்லை.  தமிழகத்தில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட யாதவ சமுதாய மக்கள் இருந்தும் எந்த முக்கியத்துவமும் இல்லாமல் இருக்கிறோம். இந்திய மக்கள் கழகம் தமிழகத்தில் அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி தேர்தலை சந்திக்க உள்ளது என்றார்.  இக் கூட்டத்தில் யாதவ மகாசபை மாவட்டச் செயலர் கதிர், தொகுதி பொறுப்பாளர்கள் சண்முகநாதன், தங்கராஜ் உள்பட இந்திய மக்கள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நெல்லையில் யாதவ மகாசபை நிறுவனர் தேவநாதன் போட்டி

இந்திய மக்கள் கழகத்தின் சார்பில் நெல்லை பாராளுமன்ற வேட்பாளராக யாதவ மகாசபை  நிறுவனர் தேவநாதன் போட்டியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கான செயல்வீரர்கள் கூட்டம் வரும் 16ம் தேதி ஞாயிற்றுக் கிழமை அன்று மாலை 6 மணியளவில் நெல்லை RKV திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. யாதவ மகாசபை நிறுவனர் தேவநாதன் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் எந்த எந்த இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்து முடிவு செய்யப்படுகிறது. கல்வி கட்டணம் ஒழிப்பு, மாணவ,மாணவிகளுக்கு உயர்கல்வி வரை இலவசமாக அளித்தல் என்பதே இக்கட்சியின் பிரதான கொள்கை.

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar