ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு
"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை
வீரன் அழகு முத்துக்கோன்
முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்
ஆயர் குல சித்தர்கள்
இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்
திரு.சிவத்தசாமி
அழகு முத்துக்கோன் வாரிசு
செஞ்சி கோட்டை
செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்
Friday, July 11, 2014
முதல் சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்து கோனின் வரலாற்றை பள்ளி கல்லூரி பாடத்திட்டங்களில் சேர்க்க வேண்டும் யாதவ மகாசபை தேசிய தலைவர் டாக்டர் தி.தேவநாதன் யாதவ்
முதல் சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்து கோனின் வரலாற்றை பள்ளி கல்லூரி பாடத்திட்டங்களில் சேர்க்க வேண்டும் என்று யாதவ மகாசபை தேசிய தலைவர் டாக்டர் தி.தேவநாதன் யாதவ் கேட்டு கொண்டுள்ளார். 1728 ஆம் ஆண்டு கோவில்பட்டி அருகே உள்ள கட்டாளங்குளத்தில் பிறந்த வீரன் அழகு முத்துகோன் மதுரையை ஆண்ட முதலாம் கிருஷ்ணப்பா நாய்க்கர் குமரார் பெரிய வீரப்ப நாய்க்கரிடம் ஒரு செப்பேட்டின் மூலம் பட்டயம் பெற்று அரசாண்டார். வெள்ளையர்களின் கைகூலியாக செயல்பட்ட யூசுப்கான் சாகிக்கை எதிர்த்து பெத்தநாயக்கனுர் கோட்டையில் போரிட்டார். இதில் வெள்ளையர்களால் சிறை பிடிக்கப்பட்ட அழகு முத்து கோன் மற்றும் 6 தளபதிகள் பீரங்கி குழாய் முனையில் வைத்து சுடப்பட்டனர். இறுதி வரை கப்பங்கட்ட மறுத்து போரிட்டு உயிர் நீத்த வீரன் அழகு முத்து கோனின் 255 வது குருபூஜை விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள வீரன் அழகு முத்து கோனின் திருஉருவ சிலைக்கு யாதவ மகாசபை தேசிய தலைவரும் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக நிருவண தலைவருமான டாக்டர் தி. தேவநாதன் யாதவ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பேசிய அவர் முதல் சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்து கோனின் வரலாற்றை பள்ளி கல்லூரி பாடத்திட்டங்களில் அரசு சேர்க்க வேண்டும் என்று கேட்டுகொண்டார். இதைதொடர்ந்து பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் அழகு முத்து கோனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது பேசிய அவர் வீரன் அழகு முத்து கோனின் வரலாறு ஆசியர்களுக்கே தெரியவில்லை என்றும் எனவே இது குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தமிழக பாஜக மாநில செயலாளர் வானதி சீனிவாசன் வீரன் அழகு முத்துகோன் சிலைக்கு மாலை அணிவித்தார். இந்நிகழ்ச்சியில் யாதவ மகாசபை தேசிய அமைப்பு செயலாளர் குணசீலன் மற்றும் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து பாமக நிறுவனர் ராமாதாஸ்,
வீரன் அழகு முத்துகோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பேசிய அவர் அழகு முத்து வரலாற்றை பாடமாக வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அப்போது முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே. மூர்த்தி உடன் இருந்தார்.
வீரன் அழகுமுத்துகோன் சிலைக்கு ராமதாஸ் மரியாதை
விடுதலை போராட்டத்துக்கு முதல் வித்திட்ட வீரன் அழகுமுத்துக்கோனின் 276–வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு தமிழ்நாடு யாதவ மகாசபை, கோகுல மக்கள் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
சிறப்பு விருந்தினராக சமூக ஜனநாயக கூட்டணி தலைவர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு மாலை அணிவித்தார். கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, தேசிய பார்வர்டு பிளாக் நிறுவனர் பி.டி.அரசகுமார், கொங்குநாடு ஜனநாயக கட்சி தலைவர் ஜி.கே.நாகராஜ், தெலுங்கு மக்கள் கட்சி தலைவர் ராஜ்குமார், வேளாளர், பிள்ளைமார், செங்குந்த முதலியார் கூட்ட மைப்பு தலைவர் கே.ராஜன், கொங்குநாடு மேட்டுவ கவுண்டர் முன்னேற்ற சங்க தலைவர் முனுசாமி ஆகியோரும் மாலை அணி வித்தனர்.
பின்னர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:
சுதந்திர போராட்டத்திற்காக முதன் முதலில் ஆங்கிலேயரை எதிர்த்து நின்ற வீரர் அழகு முத்துகோனுக்கு அவர் போரிட்டு உயிர்நீத்த இடமான தூத்துக்குடி மாவட்டம் காட்டாங்குளமேட்டில் அவருக்கு மணி மண்டபம் கட்ட வேண்டும்.அவரது வாழ்க்கை வரலாற்றை பாடபுத்தகத்தில் சேர்க்க வேண்டும். இது அந்த சமுதாய மக்களின் கோரிக்கை மட்டுமல்ல. ஒட்டுமொத்த தமிழர்களின் கோரிக்கையாக ஏற்று அரசு செயல்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
Thursday, July 10, 2014
வீரன் அழகுமுத்துக்கோன் ஜெயந்தி விழா தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்
தூத்துக்குடி மாவட்ட எஸ்பி. துரை வெளியிட்டுள்ள அறிக்கை:சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோனின் 255வது ஜெயந்தி விழா தூத்துக்குடி மாவட்டம் கட்டாலங்குளத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசு சார்பில் நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில், யாதவர் சமுதாயத்தினர் மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்துவர்.விழா அமைதியாக நடைபெற ஏதுவாக சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்கும் பொருட்டு கலெக்டரால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளை (11ம்தேதி) காலை 5 மணி முதல் வரும் 12 ம் தேதி காலை 5 மணி வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும். ஒரு ஏடிஎஸ்பி, 11 டிஎஸ்பி உள்பட மொத்தம் 700 போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரகவி ஆழ்வார்
ஆன்மீகம் தழைத்து வந்த பாண்டிய நாட்டில் திருக்கோவூர் என்ற தலத்தில் கி.பி. 9ம் நூற்றாண்டில் ஈஸ்வர வருடம், சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரம் கூடிய நாளில் அவதரித்தார்.
நம்மாழ்வார் பிறப்பதற்கு முன் அவதரித்திருந்தாலும், நம்மாழ்வார் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர் எனலாம். சிறு வயதிலிருந்தே ஸ்ரீமந் நாராயணனிடம் பக்திகொண்டு பரமனைப் போற்றிப் பாடிவந்தார். வடமொழிப் புலமையும் கொண்டிருந்தார்.
ஒருநாள் பூஜைகள் நடத்திய பின்பு காட்டுத் தீயோ என்று எண்ணும் படியான பெரிய ஒளியைக் கண்டார். அந்த ஒளி நட்சத்திரமாக இவரைத் தெற்கு நோக்கி அழைத்து வந்தது. திருநகரி என்ற ஊரில் சென்று மறைந்தது. அங்கு கோயிலில் மரத்தடியில் 16 வருடங்களாகக் கண் மூடிய நிலையில் தவமிருந்த நம்மாழ்வாரைப் பற்றிக் கேள்விப் பட்டார். தம் அறிவுக் கூர்மையால் பேசாதிருந்த நம்மாழ்வாரைக் கண்திறக்கவும், பேசவும் வைத்தார்.
நம்மாழ்வாருடைய தத்துவ விளக்கங்களைக் கேட்டறிந்து தலை மேல் கரம் குவித்து "கண்ணிநுண் சிறுத்தாம்பு" என்ற பாசுர பாமாலை பாடி நம்மாழ்வாரையே தம் ஞானகுருவாக ஏற்றுக் கொண்டார். அவரிடமிருந்து வேதங்களைக் கற்று பரமனின் திருவடிகளே சரணம் என்று பாசுரங்கள் பாடி மகிழ்ந்தார்.
ஆலயத்தினுள்ளே நம்மாழ்வாரின் சிலை ஒன்றையும் நிறுவி ஸ்ரீமந் நாராயணனுக்கும், தம் ஆன்மீக குருவிற்கும் தினசரி பூஜைகள் செய்தும் பாசுரங்கள் பாடியும் பரமனை சேர்ந்தார்.
திருப்பாணாழ்வார்
சோழவள நாட்டின் தலைநகராக ஒருகாலத்தில் விளங்கிய உரையூரில் கி.பி.8ம் நூற்றாண்டில் காத்திகை மாதம், ரோகிணி நட்சத்திரத்தில் பாணர் என்ற இசை வழிபாடு செய்யும் குலத்தில் அவதரித்தார்.
ஸ்ரீமந் நாராயணனின் மார்பில் இருக்கும் ஸ்ரீவத்ஸம் என்கிற மருவின் அம்சமாக விளங்குகிறார். தீண்டத் தகாத குலத்தில் பிறந்தவர் என்று கருதப் பட்டதால் காவிரியைக் கடந்து அரங்கத்தம்மானைக் கண் குளிரக் காண முடியவில்லையே என்று வருந்தி, காவிரியின் அக்கரையில் நின்ற படியே திருவரங்கம் இருக்கும் திசை நோக்கித் தவமிருந்தார்.
தினசரி திருமஞ்சனம் செய்யும் உலோக சாரங்க முனிவரின் கனவில் தோன்றிய எம்பெருமான், அக்கரையில் தவமிருக்கும் திருப்பாணாழ்வாரை பட்டரின் தோளில் சுமந்து வரச்செய்து அவருக்குக் காட்சியளித்தார். தான் கண்ட காட்சியில் உள்ளம் நெகிழ்ந்து அரங்கனின் திருவடி தொடங்கி திருமுடி வரை வர்ணிக்கும் 10 பாசுரங்களைப் பாடினார்.
ஆண்டாளைப் போலவே அரங்கனிடம் அன்பு வைத்து அவனையே நினைந்து எம்பெருமானுடன் கலந்தார் என்பது புராண வரலாறு. தம் பாசுரங்களில் மனிதர்கள் எப்படி பக்தி மார்க்கத்தில் வாழ வேண்டும் என்ற முறைகளையும், பெருமானிடம் சரணாகதி அடைவதன் அவசியத்தையும் அழகாகப் பாடியுள்ளார்.
Wednesday, July 9, 2014
குலசேகர ஆழ்வார்
மலைநாடான சேர நாட்டைச் சேர்ந்த திருவஞ்சிக் கோலத்தில் கி.பி. 8ம் நூற்றாண்டில் பராபவ வருடம், மாசிமாதம், புனர்பூச நட்சத்திரத்தில் அவதரித்தார்.
ஸ்ரீமஹாவிஷ்ணுவின் கௌஸ்துபத்தின் அம்சமாக இவர் கருதப்படுகிறார். அரச குலத்தில் பிறந்த இவர் வடமொழியிலும் தேர்ச்சி பெற்று வில் வித்தை, வாள் பயிற்சி முதலியவற்றையும் பயின்றார். பாண்டிய அரசனின் மகளை மணந்து மணவாழ்க்கையில் ஈடுபட்டு, பல போர்களையும் வென்றார்.
ஸ்ரீமந் நாராயணனே இவ்வுலக வாழ்க்கை மாயை என்பதை அவருக்குணர்த்திய பின் பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டு, கடவுள் பக்தியைப் பரப்புவதே தன்கடமையென எண்ணினார். தன்னை யசோதையாகவும், கண்ணனைத் தன் குழந்தையாகவும் பாவித்துப் பல பாசுரங்கள் இயற்றினார். ராமாயணக் கதைகளைக் கேட்டுணர்ந்து ராமபக்தியில் மூழ்கித் திளைத்தார்.
பெருமாள் திருமொழி என்ற பெயரில் 105 பாசுரங்கள் இயற்றி திருவரங்கனுக்குக் கைங்கர்யம் செய்வதிலேயே காலம் கழித்துப் பரம பதமடைந்தார்.