"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

யாதவர்:ஆயர்,இடையர்,கோன்,கோனார்

ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை

வீரன் அழகு முத்துக்கோன் வரலாறு

வீரன் அழகு முத்துக்கோன்

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்

ஆயர் குல சித்தர்கள்

ஆயர் குல சித்தர்கள்

இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

திரு.சிவத்தசாமி

அழகு முத்துக்கோன் வாரிசு

செஞ்சிக் கோட்டை கோனார் கோட்டை

செஞ்சி கோட்டை

செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்

 யாதவர்

ஆயர்களே ஆதி தமிழர்கள் - கோனார்களும் குமரிகண்டமும்

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)

 யாதவர்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் தபால்தலை மதுரையில் வெளியிடப்பட்டது. அவரது தபால் தலையை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

Wednesday, August 27, 2014

24-08-2014 அன்று தமிழ்நாடு சந்திரவம்ச கூட்டமைப்பின் சார்பாக யாதவ இளஞ்சர்கள் சந்திப்பு கூட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது


யது குல வாரிசுகள் அனைவருக்கும் வணக்கம் !
கடந்த ஞாயிறு 24-08-2014 அன்று தமிழ்நாடு சந்திரவம்ச கூட்டமைப்பின் சார்பாக யாதவ இளஞ்சர்கள் சந்திப்பு கூட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது என்பதனை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்!
கூட்டத்தில் ஆர்வமுடன் சமுதாயத்தின் விடுதலைக்காகவும் உரிமைக்காகவும் கலந்து கொண்ட அத்துணை இளஞ்சர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி .
கூட்டத்தில் கலந்து கொண்டு இன்றைய சமுதாய நிலையையும், நமது உரிமைகள் எப்படி பறிக்கப்படுகிறது , எப்படி மறுக்கப்படுகிறது, எதற்காக நாம் போராட வேண்டும் என்பதையும் எடுத்துரைத்த
திரு.தாமோதரன் யாதவ் தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சி ,
திரு.சரசுமுத்து யாதவ-தலைவர்- தமிழ்நாடு யாதவர் சங்கம்
திரு.கௌரிசங்கர் யாதவ் - மாநில இளைஞ்சர் அணித் தலைவர் - ராஸ்ட்ரிய ஜனதா தளம்
ஆகியோருக்கு நமது கூட்டமைப்பின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் !




Tuesday, August 26, 2014

சித்தர் ஸ்ரீ மகான் சுருளி சுவாமிகள் தங்கம் யாதவ் வாழ்க்கை வரலாறு - 1

ஓம் சுருளி தேவாயா நமஹ!
முத்தா முத்தருளே யொயிர் கின்ற முழுமுதலே! 
சித்தா சித்தியெலாந் தரவல்ல செழுஞ்சுடரே! 
பித்தா பித்தனெனை வலிந் தாண்ட பெருந்தகையே! 
அத்தா தந்தனையே யரு ளாரமு தந்தனையே!

சித்தர்களும், முனிவர்களும், தேவர்களும், ஞானிகளும் தோன்றிய இப்புனிதமிக்க நமது பாரத பூமியில் பொதிகை மலைச்சாரலில் கேரள மாநிலத்தில் பாலக்காட்டில் உள்ள கவலப்பாறை என்ற ஊரில் கல்வி, அறிவு, ஒழுக்கங்களிலும், சிவபத்தியிலும் சிறப்புற்ற இராமசாமிக்கோன் என்ற ஒருவர் பெருவணிகராக இருந்தார். செல்வ செழிப்போடிருந்த அவரும் அவரது மனைவியாகிய செல்லம்மாள் அம்மையாரும் ஒன்றுபட்ட கருத்தும் அன்பும் உடையராய் நெறி வழுவாது இல்லற தர்மத்தை இனிதே இயற்றி வந்தனர்.
அவர்கள் இருவரும் சிவபூஜையினை மிக்க சிரத்தை
யோடு செய்து வந்தன்றியும்
" பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற "
என்னும் வள்ளுவர் வாக்கைக் கருத்தில் கொண்டு இம்மை மறுமைப் பயன்களை அளிக்கத்தக்க நன்மகப்பேற்றை நாடிப் பல நோன்புகள் இயற்றியும் புண்ணிய ஸ்தலயாத்திரை, தீர்த்த ஸ்நானம் ஸ்தலவாசம், மூர்த்திகள் தரிசனம், பெரியோர் சேவை முதலியவை செய்வித்தும் மகப்பேரின்றி மனத்துயர் கொண்டு பின்னர் பழனி மலைக்கு நடைபயணமாகச் சென்று வேல் கொண்டு வினை தீர்க்கும் முருகப்பெருமானைத் தரிசித்து கிரிவலம் வந்து இத்திருத்தலத்தில் சில காலம் தங்கி எம்பெருமான் முருகனை வழிபட்டு தங்கள் ஊர் திரும்பினர், சில நாட்களில் செல்லம்மாள் அம்மையார் வயிறு வாய்த்தது உன்னதமாகிய சுபதினத்தில், உலகில் உள்ள சர்வ ஆன்மாக்களும் உய்யவும் வலம்புரி ஈன்ற நல்முத்தென ஓர் அழகிய புத்திரனைப்பெற்றார். தந்தையாராகிய இராமசாமிக்கோன் பெரு மகிழ்ச்சியுடன் பழனியம் பதிப்பெருமான் முருகனின் பேரருளால் தோன்றிய இக்குழந்தைக்குப் " பழனியாண்டி " எனத் திருநாமம் இட்டார். 
புதைபொருள் கண்டவர்கள் போல தவப்புதல்வனாகிய பழனியாண்டியை, தாயும், தந்தையும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக சீராட்டிப் பாராட்டி வளர்த்து வந்தனர். குழந்தைப்பேறு பெற்ற மகிழ்ச்சியில் திளைத்த தம்பதியினர் பல விதமான தான, தர்மகாரியங்களைச் செய்து மகிழ்ந்தனர். 
தவமாய் தவமிருந்து பெற்ற புத்திரனாகிய பழனியாண்டி என்னும் இக்குழந்தை பிறந்தது முதல் பசி முதலான எவ்வித உணர்வுகளுக்கும் அழுகை செய்தலோ அல்லது ஏதாவது ஒன்றை பார்த்துக் சிரித்தலோ, உற்று நோக்குதலோ இன்றி மெளனமாகச் சயனித்திருக்கும். தாய் தம்மடியில் கிடத்தி வற்புறுத்தி பாலூட்டினால் மட்டுமே பாலருந்தும் இல்லையெனில் மெளனமாகவே இருக்கும் இவ்விதமே தவழுகின்ற பருவங்களிலும் நடக்கின்ற பருவ காலங்களிலும் இருந்தது மட்டுமல்லாமல் சிறு பிள்ளைகளுக்கான ஓடியாடி விளையாடுதலும், குறும்புத்தனங்களும் இல்லாமல் இருக்க கண்ட பெற்றொர் மிகவும் மனத்துயர் அடைந்து தமது குழந்தை மூளை வளர்ச்சி குன்றிய குழந்தையை.? என எண்ணக் கலக்கமுற்றனர். குழந்தையான பழனியாண்டி எந்நேரமும் வீட்டில் கண்களை மூடிக்கொண்டு பத்மாசனத்தில் வீற்றிருக்கும்.

மனக்கவலையுற்றிருந்த இராமசாமிக்கோன் இல்லத்திற்கு ஒருநாள் உருத்திராட்ச மாலையும், விபூதிபட்டையும், சடாமுடியுடன் காவியுடை தரித்த முதிய சிவயோகிஒருவர் வருகைபுரிந்தார். இராமசாமிக்கோன் அவரது மனைவி செல்லம்மாள் அம்மையாரும் சிவயோகியோரை இன்முகத்துடன் வரவேற்று அவருக்கு உணவு படைத்து தக்க உபரசணைகள் செய்தனர். பின் அவ்யோகியாரிடம் இராமசாமிக்கோன் தம் செல்வனாகிய பழனியாண்டியின் செயல்பாட்டைக். கூறி இது நமது தவக்குறைவோ என மனத்துயரத்துடன் வினவினார். சிவயோகியாரும் அச்சிறுவனை பார்க்க வேண்டுமென்று கூறிட வீட்டின் பின்புறம் உள்ள ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்த பழனியாண்டியைக் காட்டினர். சிறுவனைக் கண்ட சிவயோகியார் அப்பனே மனத்துயர் கொள்ளாதே இக்குழந்தை, சாதாரணக் குழந்தையல்ல தெய்வீக குழந்தை. இது இவ்வுலக ஆன்மாக்களை உய்விக்கும் பொருட்டு இங்கே ஊதித்துள்ளது என பெற்றொர்களிடம் கூறி , சிறுவனாகிய பழனியாண்டியை வணங்கி சென்றனர். 
இராமசாமிக்கோன்,செல்லம்மாள் அம்மையாரும் சிவயோகியோரின் கூற்றைக் கேட்டு ஆறுதல் பெற்றாலும் அவர்களுக்குள் மனசஞ்சலம் இருந்து வந்தது. நாட்கள் செல்லச் செல்ல பழனியாண்டியின் செயல்பாடு அவ்வண்ணமே மாற்றமேதுமின்றி இருந்து. 
குழந்தையான பழனியாண்டிக்குத் சுமார் 5 வயது ஆகும் போது காலத்திலும் தாய், தந்தையர் தவமாய் தவமிருந்து பெற்ற இக்குழந்தை, மற்ற குழந்தைகளைப் போல் ஓடியாடி விளையாடாமல் சிறுபிள்ளைகளின் குறும்புத்தனம் இல்லாமலும் சதாசர்வகாலமும் சிவ மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு உலகப்பற்றற்ற ஞானிபோல அமர்ந்திருப்பதை எண்ணி பெற்றோர்கள் பெரிதும் மனக்கலக்கமும் ,வருத்தமும் அடைந்தனர். அக்கால வழக்கப்படி குருகுலம் ஒன்றில் பழனியாண்டியைக் கல்வி கற்க சேர்த்தனர். 
பள்ளியில் மாணக்கனாகச் சேர்ந்த பழனியாண்டி கல்வி கற்பதில் நாட்டமில்லாத சிறுவனைப் போலவும் யாருடனும் பேசாமலும் மந்தமாக இருப்பதைக் கண்டு ஆசிரியர் பிரம்பினால் அடிக்க சிறுவனின் உடலில் எந்த இடத்தில் அடிவிழுந்ததோ ஆசிரியரின் உடலின் அப்பகுதியில் சுரீர் என வலியும் ,தடிப்பும் தோன்றியதை உணர்ந்த ஆசிரியர் அதிர்ச்சியுற்றார். அடிவாங்கிய சிறுவன் பேசாமல் வலியை உணராதவனாக இருக்க அடித்த ஆசிரியர் வலியின் வேதனையை அடைந்தார் இதுபோல் பலமுறை நடக்கவும் இது குழந்தைதான்? அல்லது ஏதேனும் மாய சக்தி படைத்த வடிவமா? என எண்ணி வியந்தார். அது முதல் மாணக்கனான பழனியாண்டியிடம் மிக்க பரிவோடும் அன்போடும் கல்வி போதித்தார். ஆனால் பழனியாண்டி அடக்கத்தோடு அமர்ந்திருந்து ஆசிரியர் ஒரு முறை போதித்தவற்றைப் பிழையில்லாமல் அப்படியே திரும்பக்கூறும் அளவுக்கு ஆற்றல் படைத்தவராக ஆசிரியர் வியக்கும் வண்ணம் நடந்து வந்தார். ஆசிரியர் போதிக்காத நேரங்களில் அங்கேயே பத்மாசனத்தில் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு நிஷ்ட்டையில் அமர்ந்துவிடுவார்.

தொடரும்......

Sunday, August 24, 2014

திருச்சி ஆட்டுகார தெரு,மஞ்சனகார தெரு பூர்வீக யாதவர் சங்கம் கிருஷ்ணா ஜெயந்தி பெரு விழா








கிருஷ்ணா ஜெயந்தி பெரு விழா. திருச்சி மாவட்ட நமது சொந்தங்களுடன்...ஏஆர்.கண்ணன் யாதவ்

மத்திய ..மாநில அரசே 150 செம்மறி ஆடுகளை இழந்த சந்தானம் யாதவ் குடும்பத்துக்கும் கோபாலகிருஷ்ணன் யாதவ் குடும்பத்துக்கும் தகுந்த இழப்பீடு தொகை வழங்குமாறு கோரிக்கை வையுங்கள் யாதவ இன மக்களே


தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே, தண்டவாளத்தில் படுத்திருந்த 150 ஆடுகள் ரயில் மோதி உயிரிழந்தன. வயலில் அமைக்கப்பட்டிருந்த பட்டியில் நேற்றிரவு மழைநீர் புகுந்ததால், தண்டவாளத்தில் ஆடுகள் சென்று படுத்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.

இன்று அதிகாலை கும்பகோணம் - மயிலாடுதுறை வழித்தடத்தில் சென்ற ரயில், ஆடுகள் மீது மோதியது. உயிரிழந்த செம்மறி ஆடுகளின் மதிப்பு 11 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என அவற்றின் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த சந்தானமும், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணனும் இணைந்து 350 செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தனர். அவர்கள் திருவிடைமருதூர் பகுதியில் அறுவடை செய்த வயல்களில் பட்டி அமைத்து ஆடுகளை மேய்ச்சலுக்காக விடுவது வழக்கம். நேற்றிரவு மழை பெய்ததால் வயலில் தண்ணீர் தேங்கியது.

மேலும், பட்டியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பும் சாய்ந்தது. இதனால், செம்மறி ஆடுகள் அனைத்தும், அருகிலிருந்த தண்டவளாகத்தில் படுத்துக்கிடந்தன.

Thursday, August 21, 2014

24.08.2014. ஞாயிற்று கிழமை அன்று சந்திரகுல யாதவ இளைஞ்சர் கூட்டமைப்பின் சார்பாக கலந்துரையாடல் கூட்டம்


அன்புள்ள எனது யாதவ சொந்தங்களே அனைவருக்கும் வணக்கம்... வருகின்ற 24.08.2014. ஞாயிற்று கிழமை அன்று நமது யாதவ அமைப்பான சந்திரகுல யாதவ இளைஞ்சர் கூட்டமைப்பின் சார்பாக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற இருகின்றது. இதில் ஒரு தனிமனிதனின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது, வேலைவாய்ப்பு ஏற்படுதுவது, கல்வி வழங்குவது, சட்டரீதியான ஆலோசனைகளை தருவது ஆகிய செயல்களுக்காக நமது அமைப்பின் சார்பாக செயல்படுத்தி கொண்டிருக்கின்றோம். இதை மேலும் வலுபடுத்த தானும் தன் சமுதாயமும் வளம்பெற அணைத்து அங்கிகாரமும் பெற்றிட ஓவொரு தனிமனிதனின் கருத்துக்களை பதிவு செய்ய அனைவரையும் வருக என வரவேற்கும் உன்னைப்போல் ஒருவன்... 

இடம் : 
3rd Main Rd, T
ower Park, 
Anna Nagar West, 
Chennai, 
Tamil Nadu 600040.... Time : 9 am ...

தொடர்புக்கு செந்தில் கோன் 9042999966

Wednesday, August 20, 2014

மும்பையில் தமிழ் அமைப்புகள் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்


மும்பையில் பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்பில் கிருஷ்ணஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.


அந்தேரி

மும்பை அந்தேரி யாதவ மகாசபை சார்பில், மரோல் பைப்லைன் தமிழ் சாய் நகரில் உள்ள சங்க பணிமனையில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. சங்க தலைவர் மாடசாமி தலைமை தாங்கினார். துணை தலைவர் முத்துசாமி, செயலாளர் பப்பு நாதன், ஆலோசகர் முத்துகுமார், நிர்வாகிகள் வேம்பு, நித்தியானந்தன் மற்றும் உறுப்பினர்கள், இளைஞர் அணியினர் உள்பட பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

பூஜையை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவை முன்னிட்டு நேற்று காலை உறியடி நிகழ்ச்சி நடைபெற்றது.

வசாய் ரோடு

பால்கர் மாவட்டம் வசாய்ரோடு யாதவ சங்கம் சார்பில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவுக்கு சங்க தலைவர் நல்லகண்ணு மணி யாதவ் தலைமை தாங்கினார். சங்க ஆலோசகர் தாஸ், செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் சீனிவாசன், கமிட்டி உறுப்பினர்கள் ராமசாமி, சுடலைகண்ணன், வேலாயுதம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு கிருஷ்ண பகவானுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

கார்கர்

நவிமும்பை கார்கர் கேந்திரிய விகார் கம்யூனிட்டி அரங்கில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழாவுக்கு சங்க தலைவர் முருகன் யாதவ் தலைமை தாங்கினார். செயலாளர் மாரியப்பன் யாதவ் முன்னிலை வகித்தார். சிவக்குமார் யாதவ் வரவேற்று பேசினார். ஆசிரியர் முத்தையா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

விழாவில் பன்வெல் தொகுதி எம்.எல்.ஏ. பிரசாந்த் தாக்கூரின் சகோதரர் பரேஷ் சேட், கார்கர் தமிழ்சங்க தலைவர் செல்லப்பா, செயலாளர் ராமர்சிங்கம், கலம்பொலி தமிழ்சங்க தலைவர் மணி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து தயிர்பானை உடைக்கும் உறியடி நிகழ்ச்சி நடந்தது.

நியூபன்வெல்

நவிமும்பை நியூபன்வெல் யாதவர் சங்கம் சார்பில் ஆந்திர சமிதி அரங்கில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாப்பட்டது. சங்க தலைவர் ராதா கிருஷ்ணன் தலைமை தாங்கினார். பன்வெல் தமிழ்ச்சங்க தலைவர் தங்கராஜ், செயலாளர் விஸ்வநாதன், பொருளாளர் லட்சுமண், ஆலோசகர் ரவிபிள்ளை, இசக்கி, அருணாச்சலம், ஆகியோர் கலந்துகொண்டனர்.

கலம்பொலி

நவிமும்பை காமோட்டே மற்றும் கலம்பொலி யாதவர் சங்கம் இணைந்து காமோட்டே செக்டர்-7 சீத்தல் அரங்கில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. நிர்வாகிகள் குமார், சங்கமுத்து, மூர்த்தி, லட்சுமணன், மாசானம், ரமேஷ், எம்.எஸ்.மணி, கே.சாமி, அர்ச்சுனன் உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. முடிவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

முல்லுண்ட்

மும்பை முல்லுண்ட் யாதவ் சங்கம் சார்பில் தானே ஸ்ரீநகர் ஸ்ரீமங்கள் காரியாலா அரங்கில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழாவில், முல்லுண்ட் யாதவ சங்க தலைவர் எஸ்.இ.முத்து முன்னிலை வகித்தார். விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு 10, 12-ம் வகுப்பு தேர்வில் 75 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு தங்கக்காசு பரிசாக வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து கிருஷ்ண பகவானுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

விழாவிற்கான ஏற்பாடுகளை தலைவர் முத்து, செயலாளர் செல்லத்துரை, பொருளாளர் பாலமுருகன் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

கோவண்டி

மும்பை கோவண்டி யாதவர் சங்கம் சார்பில் சிவாஜி நகரில் உள்ள சங்க அலுவலகத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. சிறுவர், சிறுமிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பள்ளி குழந்தைகளுக்கு சங்கத்தின் சார்பில் புத்தகப்பைகள் வழங்கப்பட்டன. சங்க தலைவர் எஸ்.இ.தாஸ், பொறுப்பாளர் இ.எஸ்.முத்து தலைமையில் கிருஷ்ண பகவானுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

யாதவ எஜூகேசன் வெல்பர் சொசைட்டி

மும்பை யாதவ எஜூகேசன் வெல்பர் சொசைட்டி சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா மாட்டுங்கா லேபர்கேம்ப்பில் உள்ள அம்பேத்கர் அரங்கில் நடைபெற்றது. கிருஷ்ண பகவானுக்கு சிறப்பு பூஜை நடந்தது. சங்க தலைவர் கோபால கிருஷ்ணன் யாதவ் தலைமை வகித்தார். சங்க செயலாளர் சங்கர் யாதவ் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக மந்திரி வர்ஷா கெய்க்வாட் கலந்துகொண்டு பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கினார்.

சுவாமி யாதவ், மாடசாமி யாதவ், சிவசுப்பிரமணியன் யாதவ், சுப்ரமணி யாதவ், ஆகியோர் கலந்துகொண்டனர். முடிவில் இ.முருகன் யாதவ் நன்றி கூறினார். சிறப்பு பூஜையில் ஐந்துமலை ஐயப்பா டிரஸ்ட் முருகேஷ் குருசாமி தலைமையிலான குழுவினர் பஜனை பாடல்கள் பாடினார்கள்.

செம்பூர்

செம்பூர் யாதவர் சங்கம் சார்பில் நடந்த விழாவுக்கு சங்க தலைவர் சுப்பையா யாதவ் தலைமை தாங்கினார். இரவு 7 மணி முதல் 12 மணி வரை கிருஷ்ண பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

தானே மாவட்டம் மிரா ரோடு தமிழ்ச்சங்கம் சார்பில் நடந்த விழாவில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இரவு 12 மணிக்கு கிருஷ்ண பகவானுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar