Tuesday, July 11, 2017
Home »
» யாதவ் மக்கள் முன்னேற்றம் அடைய தனி நலவாரியம் அமைக்க வேண்டும்: கோகுல மக்கள் கட்சி கோரிக்கை
யாதவ் மக்கள் முன்னேற்றம் அடைய தனி நலவாரியம் அமைக்க வேண்டும்: கோகுல மக்கள் கட்சி கோரிக்கை
சுதந்திர போராட்ட அழகுமுத்துக்கோனின் குரு பூஜையை முன்னிட்டு, எழும்பூர் ரயில் நிலையம் அருகேயுள்ள அவரது சிலைக்கு நேற்று கோகுல மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் எம்.வி.சேகர் தலைமையில், மத்திய சென்னை மாவட்ட செயலாளர் எம்.மோகன் முன்னிலையில் ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர் நிருபர்களிடம் கூறியதாவது:
இந்திய முதல் சுதந்திர போராட்ட அழகுமுத்துக்கோனின் வாழ்க்கை வரலாறை இந்தியா முழுவதும் உள்ள இளைஞர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் மத்திய-மாநில அரசின் பாடப்புத்தகங்களில் சேர்க்க வேண்டும். அழகுமுத்துக்கோனை பீரங்கி வாயிலில் நிறுத்தி குண்டுகளால் சுடப்பட்ட இடத்தில் இன்றைய சமுதாய மக்களுக்கும் தெரியும் வகையில் தமிழக அரசு நினைவு மண்டபம் கட்ட வேண்டும்.
விவசாயம் இல்லாமல், நீர்வளம் இல்லாததால் மேய்ச்சலுக்கான இடங்களை அரசாங்கம் பாதுகாத்து, மானிய விலையில் ஆடு, மாடுகளை கொடுத்து யாதவ மக்கள் முன்னேற்ற் அடைய தமிழக அரசு தனி நல வாரியம் அமைத்துக் கொடுக்க வேண்டும். தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி விகிதாச்சார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். டெல்லி முதல் கன்னியாகுமரி வரை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் அல்லது திருச்சி விமான நிலையத்திற்கு அழகுமுத்துக்கோன் பெயர் வைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இளைய சமுதாயத்தினர் நலன் கருதி மதுபான விற்பனையை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
0 comments:
Post a Comment