Saturday, July 15, 2017
Home »
» யாதவ மகா சபை சார்பில் வீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மரியாதை
யாதவ மகா சபை சார்பில் வீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மரியாதை
யாதவ மகா சபை சார்பில் வீரன் அழகு முத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்திய சுதந்திரத்துக்கு வித்திட்ட முதல் மாவீரன் வீரன் அழகு முத்துக்கோனுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி தமிழ்நாடு யாதவ மகா சபை சார்பில் சென்னையில் நேற்று நடந்தது. முன்னதாக, தமிழ்நாடு யாதவ மகா சபை தலைவர் எம்.கோபாலகிருஷ்ணன் தலைமையில் ராதாகிருஷ்ணன் விளையாட்டு மைதானம் அருகில் இருந்து ஊர்வலமாக யாதவ மகா சபையினர் வந்தனர். இந்த ஊர்வலம் எழும்பூர் ரயில் நிலையம் அருகில் முடிவடைந்தது.
பின்னர், அங்குள்ள வீரன் அழகு முத்துகோன் சிலைக்கு எம்.கோபாலகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து அமைப்பாளர் ேக.ஜோதிலிங்கம், கூடுதல் செயலாளர் சுப்பிரமணியம், பொருளாளர் கே.எத்திராஜ், கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் துணை தலைவர்கள் கொம்பூதி செல்வராஜ், பழனி, சேகர், பூவை சங்கர், ராமதாஸ் உள்ளிட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment