"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Saturday, August 5, 2017

“புலியையே குத்திக் கொன்னதால இந்தப் பேரு!” - வீரத்துக்குப் புகழ்பெற்ற புலிக்குளம் நாட்டு மாடுகள்

நாட்டு இன மாடுகள் பன்னாட்டு நிறுவனங்களின் சூழ்ச்சியால் அழிக்கப்பட்டு வரும் நிலையில் புலிக்குளம் மாடுகளைப் பாதுகாக்க ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு சட்டசபையில் அறிவித்திருப்பது புலிக்குளம் மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த அறிவிப்பு ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்குக் கிடைத்த வெற்றியாகவே கருதுகிறார்கள் புலிக்குளம்...

Saturday, July 29, 2017

கீதாரிகள் : ஆடு ஊடாடாம காடு விளையாதும்பாக !

தஞ்சையை ஒட்டிய கிராமத்தில் ஆட்டுக் கிடை போட்டிருந்த பாஸ்கரன் ஆட்ட தவிர எனக்கு வேற தொழிலும் தெரியாது. காலங்காலமா செஞ்ச தொழில விட்டுபோட்டு இந்த வயசுக்கு மேல எங்குட்டு போயி சம்பாரிக்க முடியும். “வரப்பே தலையன வயக்காடே பஞ்சுமெத்த” இதுதேன் கீதாரிங்க வாழ்க்க. இதுக்கு மேல ஒன்னும் சொல்ல தோணலிங்களே” என்று ஒற்றை வரியில் கீதாரிகளின் வாழ்க்கையை சுருக்கினார் தஞ்சையை ஒட்டிய கிராமத்தில்...

திருச்செந்தூர் சுடலைமாட சுவாமி கோயிலில் வருஷாபிஷேக விழா

திருச்செந்தூர் சுடலைமாடசுவாமி கோயிலில் வருஷாபிஷேக விழா நேற்று நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருச்செந்தூர் மேலத்தெரு யாதவ சமுதாய சுடலைமாடசுவாமி கோயிலில் வருஷாபிஷேக விழா நேற்று காலை 9 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. 10 மணிக்கு கும்ப பூஜையை தொடர்ந்து 11 மணிக்கு பூர்ணாகுதி தீபாராதனையும் பின்னர் சுவாமிக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் மகாஅபிஷேகம் நடந்தது....

இந்திய விடுதலைக்கு வித்திட்ட வீரன் அழகுமுத்து கோன்-முனைவர் கே.கருணாகரப்பாண்டின்வரலாற்று ஆய்வாளர்

கணக்கிட முடியாத உயிர்களை களப்பலியாக்கித்தான் நம் நாடு சுதந்திரம் அடைந்தது. பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன், நெற்கட்டும்சேவல் பூலித்தேவன் ஆகியோர் ஆங்கிலேயர்களை எதிர்ப்பதற்கு முன்பே, ஆங்கிலேயர்களை எதிர்த்து தன் உயிரை முதல் பலியாக்கி இந்திய விடுதலைக்கு வித்திட்ட வீரன் கட்டாளங்குளம் அழகுமுத்து கோன்.கோவில்பட்டி - திருநெல்வேலி நெடுஞ்சாலையில் இருந்து வலதுபுறமாக 5 கி.மீ.,...

Saturday, July 15, 2017

யாதவ மகா சபை சார்பில் வீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மரியாதை

யாதவ மகா சபை சார்பில் வீரன் அழகு முத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்திய சுதந்திரத்துக்கு வித்திட்ட முதல் மாவீரன் வீரன் அழகு முத்துக்கோனுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி தமிழ்நாடு யாதவ மகா சபை சார்பில் சென்னையில் நேற்று நடந்தது. முன்னதாக, தமிழ்நாடு யாதவ மகா சபை தலைவர் எம்.கோபாலகிருஷ்ணன் தலைமையில் ராதாகிருஷ்ணன் விளையாட்டு மைதானம் அருகில் இருந்து...

Tuesday, July 11, 2017

கட்டாளங்குளத்தில் உள்ள வீரன் அழகுமுத்துக்கோன் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு தி. தேவநாதன் யாதவ் மாலை அணிவித்து மரியாதை தி. தேவநாதன் யாதவ் மாலை அணிவித்து மரியாதை

தூத்துக்குடி மாவட்டம், கட்டாளங்குளத்தில் உள்ள வீரன் அழகுமுத்துக்கோன் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் டாக்டர் தி. தேவநாதன் யாதவ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக அழகுமுத்துக் கோனுக்கு மரியாதை செலுத்த கட்டாலங்குளம் சென்ற தலைவர் டாக்டர் தி.தேவநாதன் யாதவிற்க்கு தூத்துகுடி விமானநிலையத்திலிருந்து கட்டாலங்குளம் மணிமண்டபம்...

மாவீரன் அழகுமுத்துக்கோன் குருபூஜை விழாவையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள மாவீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு தி. தேவநாதன் யாதவ் மரியாதை

மாவீரன் அழகுமுத்துக்கோன் குருபூஜை விழாவையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள மாவீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தின் நிறுவனத்தலைவர் டாக்டர். தி. தேவநாதன் யாதவ் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார...

யாதவ் மக்கள் முன்னேற்றம் அடைய தனி நலவாரியம் அமைக்க வேண்டும்: கோகுல மக்கள் கட்சி கோரிக்கை

சுதந்திர போராட்ட அழகுமுத்துக்கோனின் குரு பூஜையை முன்னிட்டு, எழும்பூர் ரயில் நிலையம் அருகேயுள்ள அவரது சிலைக்கு நேற்று கோகுல மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் எம்.வி.சேகர் தலைமையில், மத்திய சென்னை மாவட்ட செயலாளர் எம்.மோகன் முன்னிலையில் ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர் நிருபர்களிடம் கூறியதாவது:  இந்திய முதல்...

அழகு முத்துக்கோன் 260–வது நினைவு தினம்: விடுதலை போராட்ட வீரர்களின் வரலாறு பாடத்திட்டத்தில் இடம்பெற வேண்டும் மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

அழகு முத்துக்கோன் 259–வது நினைவு தினத்தையொட்டி நடந்த குருபூஜை விழாவில், ‘‘விடுதலை போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாறு பாடத்திட்டத்தில் இடம்பெற வேண்டும்’’, என்று மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். குருபூஜை விழா சுதந்திர போராட்ட வீரன் அழகு முத்துக்கோன் 259–வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் சார்பில்...

Friday, May 19, 2017

மாட்டு வண்டிகளில் 8 நாள் பயணம் : 300 ஆண்டு பாரம்பரிய விழா

மாட்டு வண்டிகளில் பயணம்: 300 ஆண்டு பாரம்பரியம் மறக்காத பக்தர்கள்.அபிராமம் அருகே 300 ஆண்டுகளாக பாரம்பரியத்தை மறக்காமல் மாட்டு வண்டிகளில் கூடாரம் அமைத்து 8 நாள்கள் நடக்கும் திருவிழாவுக்காக, 8 நாள்கள் 200 கிமீ., துõரம் பக்தர்கள் பயணிக்கின்றனர்.அபிராமம் அருகே அகத்தாரிருப்பிலிருந்து பல நூற்றாண்டுகளுக்கு முன் அண்ணன் கூடலிங்கம், தம்பி இருளப்பன், தங்கை காளியம்மனுடன், மேற்கு தொடர்ச்சி...

Saturday, April 15, 2017

க.செந்தாமரை IAS/IPS பயிற்சி திட்டம்

வணக்கம். "க.செந்தாமரை IAS/IPS பயிற்சி திட்டம்" இந்திய குடிமைப் பணிக்கு (UPSC) தகுதியும் விருப்பமும் உள்ள நம் மாணவர்களை கண்டறிய,  வடக்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களில் மாவட்டவாரியாக பொறுப்பாளர்கள் உள்ளனர். வரும் 20.04.17 தேதிக்குள் ஆர்வமுள்ளவர்கள் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியை சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்;  நேர்காணல் தேதி மற்றும் இடம் விரைவில் அறிவிக்கப்படும்.  அதன்பின்...

Sunday, March 12, 2017

அழகுமுத்துக்கோன் சிலையை மாற்ற போராடும் கோகுலம் அறக்கட்டளை

மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் மணிமண்டபம் சிலை தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் 2004 திறக்கப்பட்டது..ஆனால் தற்பொழுது அழகுமுத்துக்கோன் சிலை உடையும் தருவாயில் உள்ளது இதை பற்றி பல முறை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு அவர்களிடம் நேரிலும் மனு மூலமாக தெரிவித்தோம் எந்த பலனும் இல்லை... வருடா வருடம் ஜூலை 11 ம் தேதி அழகுமுத்துக்கோன் ககுருபூஜை தமிழக...

Thursday, March 2, 2017

யாதவர் சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கவேண்டும்: அழகு முத்துகோன் பேரவை

காளையார்கோவில்: யாதவர் சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக்கோரி அழகு முத்துகோன் பேரவை வலியுறுத்தியுள்ளனர்.காளையார்கோவிலில் நிறுவனத்தலைவர் வேல்ராஜ் கொடியேற்றினார். பேரவை ஆலோசனைக்கூட்டம் யாதவா சங்க ஒன்றியதலைவர் அங்குசாமி தலைமையில் நடைபெற்றது. மாநில தலைவர் ராஜன், செயலாளர் சுபாஷ் சேர்வைக்காரர், இளைஞரணி செயலாளர் கோகுல் சத்யா,மகளிரணிதலைவி சுமித்ரா, மாவட்ட செயலாளர் பாலா,பொருளாளர் திரு மூர்த்தி பங்கேற்றனர். தீர்மானங்கள்: அரசு...

Sunday, February 26, 2017

பழமை வாய்ந்த இடையன்வயல் கோபாலமடம் புனரமைக்கப்படுமா?

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம் இடையன்வயலில் சிதிலமடைந்து காணப்படும் பழமை வாய்ந்த கோபாலமடத்தை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த மடம் 311 ஆண்டுகளுக்கு முன் அன்றைய சேதுபதி மன்னரான கிழவன் ரெகுநாத சேதுபதி காலத்தில் கட்டப்பட்டதாக செப்பேடுகளில் குறிப்புகள் காணப்படுகின்றன. இந்நிலையில் இந்த கோபாலமடமும், இங்குள்ள ராமர் பாதம் கோயிலும் சிதிலமடைந்து...

Tuesday, February 7, 2017

நாடு முழுவதும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் அகில இந்திய யாதவ மகா சபை மாநாட்டில் தீர்மானம்

நாடு முழுவதும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ராமநாதபுரத்தில் நடைபெற்ற அகில இந்திய யாதவ மகா சபை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அகில இந்திய யாதவ மகாசபையின் சார்பில் ராமநாதபுரத்தில் யாதவ எழுச்சி மாநாடு தமிழ்நாடு மாநில தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் யூனியன் தலைவர் மாதவனூர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாநில துணை தலைவர்...

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar