"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

யாதவர்:ஆயர்,இடையர்,கோன்,கோனார்

ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை

வீரன் அழகு முத்துக்கோன் வரலாறு

வீரன் அழகு முத்துக்கோன்

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்

ஆயர் குல சித்தர்கள்

ஆயர் குல சித்தர்கள்

இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

திரு.சிவத்தசாமி

அழகு முத்துக்கோன் வாரிசு

செஞ்சிக் கோட்டை கோனார் கோட்டை

செஞ்சி கோட்டை

செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்

 யாதவர்

ஆயர்களே ஆதி தமிழர்கள் - கோனார்களும் குமரிகண்டமும்

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)

 யாதவர்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் தபால்தலை மதுரையில் வெளியிடப்பட்டது. அவரது தபால் தலையை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

Thursday, July 31, 2014

கோகுலம் அறக்கட்டளை நிறுவுனர் மூர்த்தி யாதவ் கண்ணப்பன் ஐயாவுக்கு வாழ்த்து மடல்

என் குல அரசுக்கு முதலில் பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் தலைவா உங்கள் ஆட்சியில் சமுகம் மிக பெரிய அரசியல் விழிப்புணர்ச்சி அடைந்தது.இந்த காலகட்டத்தில் தான் வீரன் அழகுமுத்துகோன் சிலை சென்னை எக்மோர் இரயில் நிலையம்முன்பு அப்போதைய தமிழக முதலமைச்சர் செல்வி.ஜெ ஜெயலலீதா திறந்துவைத்தார் இந்த நிகழ்ச்சியில் சுமார் 7 லட்சம் யாதவர்கள் கலந்துகொண்டார்கள் அந்த விழாவில் பேசிய முதலமைச்சர் கட்டலாங்குலத்தில் வீரன் அழகுமுத்துகோன் சிலை அரசு சார்பில் அமைக்கப்பட்டும் மேலும் வீரன் அழகுமுத்து கோன் குருபூஜை அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவித்தார்.மேலும்இவரது முயற்ச்சியால் இந்த காலத்தில் அழகுமுத்து கோனார் பெயரில் அரசு போக்குவரத்து கழகம் பேருந்துகளை இயக்கியது(veeran Azagumthu kone transport corparation) மற்றும் என்னற்ற சாதனை செய்துள்ளீர்கள்
நன்றி இவ்வாறு கோகுலம்அறக்கட்டளை நிறுவுனர் திரு மூர்த்தி யாதவ் கூறினார

Wednesday, July 30, 2014

யாதவர்களே தனி இட ஒதுக்கீடு(MBC)வேண்டுமா? வேண்டாமா?


Photo: தனி இட ஒதுக்கீடு(MBC) என்பது கட்டாயம் தேவை என்கிற சூழ்நிலையை நோக்கி யாதவ சமுதாயம் சென்று கொண்டு இருக்கிறது . சொல்லப் போனால் ஒவ்வொரு சமுதாயமும் அதே நிலையில் தான் உள்ளது . ஏற்க்கனவே தனி இட ஒதுக்கீடு பெற்றுள்ள சில சமுதாய மக்கள் கூட அது போதவில்லை உள் இட ஒதுக்கீடு வேண்டும் என போராட துவங்கி விட்டனர் , நாமோ இன்னமும் போராடாமல் பிறரின் போராட்டத்தை மட்டும் வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளோம் .

சரி நமக்கு இட ஒதுக்கீடு வேண்டுமா ? வேண்டாமா ? என்ற முக்கிய கேள்வியை உங்கள் முன் வைக்கின்றோம் ! 

வேண்டும் எனில், ஏன் வேண்டும் என்றும் ? 
வேண்டாம் எனில் , ஏன் வேண்டாம் என்றும் கூறுங்கள் ?

தனி இட ஒதுக்கீட்டிற்கான அவசியத்தை மற்றொரு பதிவில் விரிவாக கூறுகிறேன் !!! 

போராட தயாராக உள்ள போராளிகள் 9042999966 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும் !!!
தனி இட ஒதுக்கீடு(MBC) என்பது கட்டாயம் தேவை என்கிற சூழ்நிலையை நோக்கி யாதவ சமுதாயம் சென்று கொண்டு இருக்கிறது . சொல்லப் போனால் ஒவ்வொரு சமுதாயமும் அதே நிலையில் தான் உள்ளது . ஏற்க்கனவே தனி இட ஒதுக்கீடு பெற்றுள்ள சில சமுதாய மக்கள் கூட அது போதவில்லை உள் இட ஒதுக்கீடு வேண்டும் என போராட துவங்கி விட்டனர் , நாமோ இன்னமும் போராடாமல் பிறரின் போராட்டத்தை மட்டும் வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளோம் .


சரி நமக்கு இட ஒதுக்கீடு வேண்டுமா ? வேண்டாமா ? என்ற முக்கிய கேள்வியை உங்கள் முன் வைக்கின்றோம் ! 

வேண்டும் எனில், ஏன் வேண்டும் என்றும் ? 
வேண்டாம் எனில் , ஏன் வேண்டாம் என்றும் கூறுங்கள் ?

தனி இட ஒதுக்கீட்டிற்கான அவசியத்தை மற்றொரு பதிவில் விரிவாக கூறுகிறேன் !!! 

போராட தயாராக உள்ள போராளிகள் 9042999966 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும் !!!

ஜீலை 31 திரு.R S ராஜகண்ணப்பன் அவர்களின் பிறந்தநாள்

திரு.ராஜகண்ணப்பன் தமிழக யாதவ சமுகத்தில் மிக முக்கியமான தலைவரக்களில் ஒருவர். இவர் அமைச்சராக இருந்த போதுதான் யாதவர் சமுகம் மிக பெரிய அரசியல் விழிப்புணர்ச்சி அடைந்தது.இந்த காலகட்டத்தில் தான் வீரன் அழகுமுத்துகோன் சிலை சென்னை எக்மோர் இரயில் நிலையம்முன்பு அப்போதைய தமிழக முதலமைச்சர் செல்வி.ஜெ ஜெயலலீதா திறந்துவைத்தார் இந்த நிகழ்ச்சியில் சுமார் 7 லட்சம் யாதவர்கள் கலந்துகொண்டார்கள் அந்த விழாவில் பேசிய முதலமைச்சர் கட்டலாங்குலத்தில் வீரன் அழகுமுத்துகோன் சிலை அரசு சார்பில் அமைக்கப்பட்டும் மேலும் வீரன் அழகுமுத்து கோன் குருபூஜை அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவித்தார்.மேலும்இவரது முயற்ச்சியால் இந்த காலத்தில் அழகுமுத்து கோனார் பெயரில் அரசு போக்குவரத்து கழகம் பேருந்துகளை இயக்கியது(veeran Azagumthu kone transport corparation)

பின்னர் கருத்து வேறுபாட்டின் காரணமாக அதிமுகவில் இருந்து விலகி தமிழ்நாடு யாதவ மகாசபை ஆதரவுடன் மக்கள் தமிழ் தேசம் கட்சி
என்ற அரசியல் கட்சி தொடங்கினார் இந்த கட்சிக்கு யாதவ மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.



Tuesday, July 29, 2014

புறக்கணிக்கப்பட்டும் யாதவ மாணவர்கள்

விழுப்புரம் மாவட்டம் அன்னியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அரசு  இலவச மீதிவண்டியை நம் சமுதாயத்தை சேர்ந்த 8 க்கும் மேற்பட்டா மாணவிகளுக்கு தரவில்லை மற்ற மாணவ மணவிகளுக்கு தந்துள்ளனர் காரணம் கேட்டால் சைக்கிள் குறைவாக வந்ததால் இப்படி  செய்தோம் என்று ஆசிரியர் கூறுகிறார் . அதாவது சைக்கிள் பத்தல அதனால்  BC (பிற்பாடுத்தபட்டோர்) இவர்கள் 10 பேர் தானே  அதனால் தரவில்லை என்று கூறுகிறார்களே இதெல்லாம் ஒரு காரணம்.

க.குணசேகர்
விழுப்புரம்

யாதவ் சங்கம் முலுண்ட் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா

இடம்: ஸ்ரீ மங்கள காரியாலயா ஹால் (முதல் மாடி)
ஸ்ரீ நகர் ஷாப்பிங் சென்டர், போலீஸ் ஸ்டேஷன் அருகில்,
டாடா பைசன் எதிரில், ஸ்ரீ நகர், தானே.

நாள்: 17-08-2014 

இவண்

முலுண்ட் யாதவா சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்

பரமக்குடியில் கிருஷ்ண ஜெயந்தி விழா

இடம்: பிருந்தாவன வளாகம்,யாதவர் திருமண மாளிகை பரமக்குடி
நாள்: 24-08-2014 

அனுப்பியவர்
திரு.ஜீவா

குறுங்கை யாதவ சமுதாயம் நடத்தும் கிருஷ்ண ஜெயந்தி விழா

இடம்: ஸ்ரீ உச்சிமாகாளி அம்பாள் திருக்கோவில்,மேலரத வீதி,திருக்குகுறுங்குடி
நாள்: 17-08-2014 



அனுப்பியவர்
திரு.N.தினேஷ் யாதவ்
குறுங்கை யாதவ சமுதாயம்,திருக்குறுங்குடி திருநெல்வேலி மாவட்டம்




கோகுலம் அறக்கட்டளை முதலாம் ஆண்டுவிழா பரிசு போட்டி

Photoகோகுலம் அறக்ட்டளை முதலாம் ஆண்டுவிழா வருகின்ற கிருஷ்ணா ஜெயந்தி அன்று நடைபெறுகிறது அது சமயம் யாதவ இளைஞர் களுக்கு மைபைல் பரிசு வழக்கப்படுகிறது குலுக்கல் நடைபெறும் இடம் சிங்கப்பூர் நடத்துபவர் இசக்கிமுத்து யாதவ் இவ்வாறு கோகுலம் அறக்கட்டளை நிறுவுனர் திரு ஜெ முர்த்தி  யாதவ் கூறினார்

அனைத்து யாதவ இளைஞர்கள் தங்களது பெயர் மைபல் நம்பர் கோகுலம் அறக்கட்டளை யில் பதிவு பண்னவும்
Click Here to Register

இப்படிக்கு
ஜெ முர்த்தி யாதவ்
கோகுலம் அறக்கட்டளை நிறுவுனர்

Monday, July 28, 2014

ஆயர்களின் பிரிவுகள்

ஆயர்களின் பிரிவுகள் மூன்று வகைப்படும். அவை
          1.பசுவினத்து ஆயர் (கோட்டினத்து ஆயர்)
                       2.ஆட்டினத்து ஆயர் (புல்லினத்து ஆயர்)
          3.கோவினத்து ஆயர் 

பசுவினத்து ஆயர்
இவற்றில் பசுவினத்து ஆயர்கள் பசுக்கூட்டங்களை மிகுதியாக உடையவர்களாக இருந்துள்ளனர். அவர்கள் பசுக்கள் மூலம் கிடைக்கும் பால், வெண்ணெய் போன்றவற்றை விற்று வாழ்ந்து வந்துள்ளனர். இதனை,
       “............................................................................தொடுதரத்
       துன்னி தந்தாங்கே நகைகுறித்து எம்மைத்
       திளைத்தற்கு எளிய மாக்கண்டை அளைக்கு எளியாள்
       வெண்ணைக்கும் அன்னள் எனக் கொண்டாய்”
                                           ( முல்லைக்கலி.11௦.3-6)
என்ற முல்லைக்கலியின் மூலம் அறியலாம். பசுவினத்து ஆயர் ‘நல்லினத்து ஆயர்’ எனவும் வழக்கப்பெற்றனர். இதனை
        “தொல் இசை நட்ட இசையோடு தோன்றிய
         நல் இனத்து ஆயர்”                      (முல்லைக்கலி 4.5-6)
என்ற முல்லைக்கலியின் பாடல்வரிகள் சுட்டுகின்றன.

          இவ்ஆயர்களின் தலையாய பணி ஆநிரைகளை மேய்த்தலும் பால் கறத்தலும் ஆகும். கறந்த பாலினைத் தயிராகவும், மோராகவும் பக்கவப்படுத்தி அருகிலுள்ள இடங்களுக்குச் சென்று விற்று வருதல் ஆயர்குலப் பெண்களான ஆய்ச்சியரின் வேலையாகக் கருதப்பட்டது.
இதனை இக்குலப் பெண்கள் மனமுவந்து செய்து வந்தனர் என்பதை,
          “அஃது அவலம் அன்று மன்
          ஆயர் எமர் ஆனால், ஆயர்தியேம் யாம்” (முல்லைக்கலி 8.8-9)
என்ற வரிகள் எடுத்துக்காட்டுகின்றன.
ஆட்டினத்து ஆயர்:

         ஆட்டினத்து ஆயர்கள் ஆடு மேய்ப்பதையே தொழிலாகக் கொண்டிருந்தனர். இதனை,
         “தளரியால் என்னறிதல் வேண்டின் பகையஞ்சாப்
          புல்லினத் தாயர் மகனேன் மற்றியான்” (முல்லைக்கலி.113.6-7)
என்ற முல்லைக்கலியின் வரிகள் உறுதிபடுத்துகின்றன. இவர்களைப் ‘புல்லினத்து ஆயர் என்றும் வழங்குவர். இந்த மாட்டினத்து ஆயர், ஆட்டினத்து ஆயர் ஆகிய இருவரில் மாட்டினத்து ஆயர்களே உயர்வானவர்களாக மதிக்கப்பட்டுள்ளனர். இதனை,
          “புல்லினத் தாயனை நீயாயிற் குடஞ்சுட்டு
           நல்லினத் தாயர் எமர்”     (முல்லைக்கலி 113.6-7)
என்ற வரிகள்மூலம் உறுதிபடுத்த முடிகின்றது.
           ஆயர் எனப்படுவர் தம்குலத்தால் ஒருவரேயெனினும் அவர்கள் வளர்த்துவந்த உயிரினங்களின்பொருட்டு மேற்காணும் பெயர்களைப் பெற்றுள்ளனர் என்பது தெளிவாகின்றது.

கோவினத்து ஆயர்
கோவினத்து ஆயர்கள் உழவுக்குப் பயன்படும் எருதுகளை அதிகமாக வைத்திருந்தனர். இக்கோவினத்து ஆயர்களும் பசுக்களை வளர்த்து அதன்மூலம் கிடைக்கும் பால் முதலிய பொருட்களை விற்று தங்களின் தேவையைப்  பூர்த்தி செய்துகொண்டனர்.

நன்றி
     யாதவர் தன்னுரிமை பணியகம் (YES)
தட்டச்சு வேலை
     மணி கோனார்
தமிழ்நாடு கோனார் பேரியக்கம்

கோமாதாவை போற்றி வணங்குவது ஏன்?

பொதுவாக,மாமிசம் சாப்பிடுபவர்கள், சாப்பிடாதவர்களை நோக்கி, பசும்பால் பசுவின் ரத்தத்தில் உற்பத்தியாவது தானே! அதைக் குடிக்கும் நீங்கள் மாமிசம் சாப்பிடும் எங்களை ஏதோ பாவம் செய்து விட்டது போல பார்க்கிறீர்களே! என்று கேலியோ, விதண்டாவாதமோ பேசுவார்கள்.பசுவுக்கு மட்டும் தான் இறைவன் ஒரு அரிய குணத்தைக் கொடுத்திருக்கிறான், ஒரு பசுவிடம் உற்பத்தியாகும் பால் முழுவதையும் கன்றால் குடிக்க முடியாது. அதனால், மிஞ்சும் பாலை மனிதர்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். பசுவின் பாலைக் கறப்பதற்கு காம்புகளை இழுக்கும் போது அதற்கு வலிக்குமோ என்று நமக்கு தோன்றும். ஆனால் எதற்கு எவ்வித துன்பமும் ஏற்படுவதில்லை. சந்நியாசிகளின் உணவில் பால் முக்கிய இடம் பெறுகிறது. காரணம் அது நற்குணத்தை வளர்க்கும் பானமாக இருக்கிறது. மேலும், எந்த ஜீவனையும் இம்சை செய்து பெறப்படாததாக இருக்கிறது. துன்பமேயின்றி கிடைக்கும் பசும்பால் அசைவ வகையில் சேராது.
மேலும் பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் அவசியம். ஏதோ ஒரு காரணத்தால் குழந்தைக்குத் தாய்ப்பால் கிடைக்காமல் போனால், அதற்கு மாற்று பசும்பால் தான். கிட்டத்தட்ட தாய்ப்பாலுக்கு இணையான குணங்களும், குழந்தைக்கு ஊட்டம் கொடுத்து வளர்க்கும் தன்மையும் பசும்பாலில் மட்டும்தான் இருக்கிறது. கோமாதா = கோ” என்றால் பசு, மாதா” என்றால் அன்னை. அன்னைக்கு நிகரான பயன்தருவதால் இந்துக்கள் கோமாதாவை போற்றி வணங்குகிறோம்.
பசும்பால் மூலம் கிடைக்கும் பயன்கள் தொடர்பாக ஜெர்மனியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுபற்றி நிபுணர்கள் கூறியதாவது: உறக்கத்தை நிச்சயிப்பது மெலடோனின் என்ற ஹார்மோன். இந்த ஹார்மோனில் குறைபாடு ஏற்படும்போது உறக்கம் பாதிக்கப்படும். மெலடோனின் ஹார்மோனை சீராக சுரக்கச் செய்கிறது பசும்பால். தூக்கம் வராமல் சிரமப்பட்டவர்களுக்கு பசும்பால் கொடுத்து சோதனை செய்ததில் நல்ல பலன் கிடைத்துள்ளது.அதிகாலை 2 மணி முதல் 4 மணிக்குள் கறக்கப்படும் பசும்பாலில் மெலடோனின் அதிகம் இருக்கும். இதை பதப்படுத்தி பாதுகாக்கவும் முடியும். சத்துக்கள் அழியாது. சுகாதாரமான சூழ்நிலை, ஆரோக்கியமான உணவு கிடைக்கும் மாடுகளின் பாலில் மெலடோனின் சத்து அதிகம் இருக்கும்.
இனியாவது இந்துக்கள் மாட்டிறைச்சி உண்பதை நிறுத்துவார்களா ? பசுவதையை எதிர்த்து போராடுவார்களா ?

நன்றி
இந்து மதம் - உலக மக்களின் மதம்

மும்பை அந்தேரி யாதவ மகாசபை சார்பாக கிருஷ்ண ஜெயந்தி விழா

IMG-20140728-WA0116மும்பை அந்தேரி யாதவ மகாசபை சார்பாக கிருஷ்ண ஜெயந்தி விழா மற்றும் கணபதி விழா நடக்கவுள்ளது இதற்க்கான ஆலோசனை கூட்டம் மும்பையில் நடைப்பெற்றது இந்த கூட்டத்தில் விழா நடத்துவது பற்றி சில முக்கிய முடிவுகளை எடுக்கப்பட்டது இந்த விழாவில் பேசிய அந்தேரி யாதவ மகாசபை தலைவர் திரு.மாடசாமி யாதவ். என் உயிரிலும் மேலான யாதவ சொந்தங்களே இன மானம் காக்க ஓரணியில் திரள்வோம்.தமிழகத்தில் யாதவனின்றி எதுவும் நடக்காது என நிருபித்து காட்டுவோம்.ஆண்டவன் அவதரித்த குலம் நமது ஆயர் குலம்,ஆனால் ஆள முடியவில்லை?

முதல் விடுதலை வீரனை ஈன்ற இனம் நமது ஆயர் இனம்,இன்று தமிழகத்தில் அடையாளம் இல்லாமல் இருக்கிறது.இதற்கு யார் காரணம்?
மகாபாரதம் மூலம் உலகிற்கு அரசியலை கற்று தந்த இனம் இன்று அரசியல் அங்கிகாரம் இல்லாமல் தவிக்கிறது.இதற்கு யார் காரணம்?
நம் சமுதாயத்தின் மீதான அடக்கு முறையை அழித்தெறிய ஒன்றுபடுவோம் வென்று காட்டுவோம்.
என்றும் சமுதாய பணியில் ஓன்று திரள வேண்டும் என்றும் வரும் கிருஷ்ண ஜெயந்தி விழாவை மிக சீரும் சிறப்பாகவும் செய்ய வேண்டும் என்றும் பேசினார் அதனை தொடர்ந்து  கூட்டத்திற்கு வந்த அணைத்து உறுப்பினர்களுக்கும் அந்த கிளையின் ஆலோசகர் திரு.முத்துகுமார் யாதவ் அவர்கள் நன்றி  தேரிவித்தார்  பின்னர் அந்தேரி யாதவ மகாசபை சார்பாக அந்த ஏரியா சிவசேன பிரமுகர் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் இந்த நிகழ்ச்சியில் அணைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்
நன்றி
   S P Das, Mumbai

யாதவர் பண்பாட்டுக் கல்வி அறக்கட்டளை தஞ்சாவூர் மற்றும் சென்னை காவேரி மருத்துவமனை இலவச இருதய மருத்துவ முகாம்

இடம்: பங்காருகாமாட்சி அம்மன் திருமண மண்டபம், மேலவீதி,தஞ்சாவூர்

நாள்: 16-08-2014 சனிக்கிழமை, காலை 9 மணி முதல் மதியம் 1:00 மணி வரை

நன்றி
    யாதவர் பண்பாட்டுக் கல்வி அறக்கட்டளை,தஞ்சாவூர்

யாதவர் பண்பாட்டுக் கல்வி அறக்கட்டளை தஞ்சாவூர் பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா

யாதவர் பண்பாட்டுக் கல்வி அறக்கட்டளை சார்பில் 2013-2014 கல்வி ஆண்டில் தஞ்சை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் +2 வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதக மதிப்பேண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி, பாரட்டி தமிழ்நாடு யாதவ மகாசபை தலைவர் மனித நேயர் டாக்டர் எம்.கோபாலகிருஷ்ணன் அவர்கள் சிறப்புரை நிகழ்த்த உள்ளார்கள் அனைவரும் குடும்பத்துடம் வருகை தந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்.

இடம்: பங்காருகாமாட்சி அம்மன் திருமண மண்டபம், மேலவீதி,தஞ்சாவூர்
நாள்: 16-08-2014 சனிக்கிழமை, மாலை 4:00 மணி
                  
 குறிப்பு:
    பத்தாம் வகுப்பில் 400 மதிப்பெண்களுக்கு மேலும், பன்னிரெண்டாம் வகுப்பில் 1000 மதிப்பெண்களுக்கு மேலும் 2013-14 ம் கல்வி ஆண்டில் பெற்ற மாணாக்கர்களின் மதிப்பெண் பட்டியலின் நகல் 10.08.2014 க்குள் எங்களுக்கு கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.உரிய மாணவர்களிடம் தான் பரிசு வழங்கப்படும்



நன்றி
    யாதவர் பண்பாட்டுக் கல்வி அறக்கட்டளை,தஞ்சாவூர்

தட்டச்சு வேலை

தாமோதரன் கோனார்
மணி கோனார்
தமிழ்நாடு கோனார் பேரியக்கம்

Friday, July 25, 2014

யாதவர் பெருமை சொற்பொழிவு

மதுரை வடக்குமாசிவீதி ஆதினம் மடத்தில் 25.7.2014 சனிகிழமை மாலை :யாதவர் பெருமை என்ற தலைப்பில் ஸீ மதனகோபால சுவாமிகள் சொற்பொழிவு ஆற்றுகிறார் மதுரை மாவட்ட யாதவ சொந்தங்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம் 

இவண் 
மதுரை மாவட்ட யாதவ மகாசபை

Thursday, July 24, 2014

கரந்தைக் கவி வேங்கடாசலம் பிள்ளை

கி.பி.1886ஆம் ஆண்டு மார்கழித்திங்கள் ஐந்தாம் நாள் அரங்க வேங்கடாசல பிள்ளை பிறந்தார். அவர் பிறந்த இடம் தஞ்சைக் கந்தருவக் கோட்டை மோகனூர் ஆகும். அங்குள்ள உயர்நிலைப்பள்ளியில் கல்வியும், தமிழாசிரியர் குயிலையா சுப்பிரமணிய அய்யரிடம் தமிழ் இலக்கியங்களையும் பயின்ற பின்னர்க் காவல்துறை கண்காணிப்பாளராயிருந்த இலக்கணம் மா.நா.சோமசுந்தரம் பிள்ளை அவர்களிடம்தொல்காப்பியம் பயின்றார். செட்டிநாடு, தஞ்சை ஆகிய இடங்களில் பத்தாண்டுகட்கு மேல் தமிழாசிரியராயிருந்தார். கரந்தைத் தமிழ்ச்சங்கம் வெளியிட்ட தமிழ்ப்போழில் இதழாசிரியராயிருந்து சீரிய ஆய்வுக்கட்டுரைகள் எழுதிவந்தார். 1932ல் திருவையாறு அரசர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர் ஆனார். 1938ல் கரந்தை தமிழ்ச்சங்க வெள்ளி விழாவில் அவருக்குக் கரந்தைக் கவிராயன் என்ற பட்டத்துடன் தங்கப்பதக்கமும் வழக்கப் பெற்றது. 1946ல் அவரது அறுபது ஆண்டு நிறைவு விழாவின்போது இவருக்கு ஓராயிரம் வெண்பொற்காசுகள் அளிக்கப் பெற்றன. கரந்தைத் தமிழ்ச் சங்க நிகழ்ச்சி அனைத்திற்கும் அவரே வரவேற்புரைகளும், வாழ்த்துப் பாக்களும் எழுதிக் கொடுத்தார். நகைச்சுவையும், சிலைடை நயமும் கலந்த நடையில் மாணாக்கர்கட்குக் கல்வி புகட்டியும் அறிஞர்களுடன் உரையாடியும் வந்தார். அவர் நினைத்த அளவில் பாடலியற்றும் ஆசுகவியாவார். தன் ஆசான் குயிலையா மீது ஆசான் ஆற்றுப்படை பாடினார். இவர் தெய்வச் சிலையார், தொல்காப்பிய உரைக்குறிப்பு, சிலப்பதிகாரம், மணிமேகலை நாடகங்கள், செந்தமிழ்க் கட்டுரைகள், உரைநடைக் கோவை ஆகியவற்றின் ஆசிரியர். நாவலர் ந.மு.வேங்கடாசாமி நாட்டாருடன் அகநானூற்றுக்கு அரிய உரை எழுதியுள்ளார். சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினால் நடத்தப்பெற்ற அகநானூற்றுக்கு அரிய உரை எழுதியுள்ளார். சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினால் நடத்தப் பெற்ற அகநானூற்று மாநாட்டில் தலைமையுரை ஆற்றியுள்ளார்.
நன்றி
     யாதவர் களஞ்சியம் ச.சி.செல்லம்
     யாதவர் தன்னுரிமைக் பணியகம்
தட்டச்சு வேலை
      மணி கோனார்

அனுப்பியவர்
மணி கோனார்,சென்னை

Wednesday, July 23, 2014

மீண்டும் வெளிவருகிறது “யாதவ மித்திரன்”!

“யாதவ மித்திரன்” என்கிற திங்கள் இதழ்(மாத) 1970 ஆண்டு முதல் மதுரையில் இருந்து வெளிவந்திருக்கிறது. "யாதவர் கல்லூரி" வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகித்த மாத இதழ், ஆசிரியர் அய்யா ரெங்கசாமி அவர்களின் மறைவிற்கு பிறகு வெளிவரவில்லை.“யாதவ மித்திரன்” ஆசிரியர் மற்றும் உரிமையாளர் குடும்பத்தினருடன் கலந்து பேசினோம், அவர்கள் "யாதவர் தன்னுரிமைப் பணியகம்" நடவடிக்கைகளை பார்த்து "யாதவ மித்திரன்" இதழை பயன்படுத்தி கொள்ள அனுமதி அளித்துள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.
44 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் "யாதவர் தன்னுரிமைப் பணியகம்" போர்வாளாக வரும் காலங்களில் "யாதவ மித்திரன்" இருக்கும் என்ற நம்பிக்கையோடு உங்கள் பார்வைக்கு !!! 
உங்களுடைய கருத்துகளை பதிவு செய்யவும் !!!

நன்றி !!! Athiban Yadav 

Join With Us!


கீழ்கண்ட நபர்களிடம் இருந்து தகவல்கள் பெறப்பட்டு இந்த இணையதளத்தில் பதிவு செய்யபடுகிறது என்பதை தெரிவித்துகொள்கிறோம்.
தங்களிடம் இருக்கும் நம் சமுகம் தொடர்பான தகவல்களை எங்களுக்கு அனுப்ப tamilyadavs@gmail.com மேலும் இந்த இணையதளத்தில் இணைய தங்களின் பெயர், மாவட்டம்,கிராமம், தொலைபேசி எண்களை  tamilyadavs@gmail.com அனுப்பு வைக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

(குறிப்பு:இந்த  இணையதளம் எந்த ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கோ/அமைப்புக்கோ சம்பந்தம் இல்லை. நம் சமுகத்தின் சார்பாக இயங்கும் அனைத்து அரசியல் கட்சி/அமைப்புகளின் தகவல்களும் பதிவு செய்யபடும்)

இந்த இணையதளத்தில் நம் சமுகம் தொடர்பான அனைத்து தகவல்களையும் பதிவு செய்ய திட்டமிட்டுள்ளோம் அதனால் அனைத்து பகுதிகளிலும் ஒரு தொடர்பை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம் அதனால் விருப்பம் உள்ளவர்கள்
தங்களின் பெயர், மாவட்டம்,கிராமம், தொலைபேசி எண்களை  tamilyadavs@gmail.com அனுப்பு வைக்குமாறு கேட்டுகொள்கிறோம். நீங்கள் அனுப்பும் தகவல் தங்களின் பெயரிலே பதிவு செய்யப்படும்.

பெயர்அமைப்புகள்
திரு.பாரதிராஜா யாதவ்பாரத முன்னேற்ற கழகம்(BMK)
திரு.அதிபன் யாதவ்யாதவர் தன்னுரிமைப் பணியகம்(YES)
திரு.செந்தில் குமார் யாதவ்தமிழ்நாடு சந்திரவம்ச கூட்டமைப்பு(TCA)
திரு.ஜெ மூர்த்திகோகுலம் அறக்கட்டளை(GA)
திரு.சண்டியர் பாலா யாதவ்தமிழ்நாடு வீரயாதவர் இளைஞர் கூட்டமைப்பு


பெயர்மாவட்டம்தொலைபேசி எண்
திரு.ராமமூர்த்தி யாதவ்திருவண்ணாமலை8681962857
திரு.செந்தில் குமார் யாதவ்திருவண்ணாமலை9042999966
திரு.தாமோதரன் யாதவ்திருவண்ணாமலை7200671482
திரு.மணி கோனார்சென்னை98884774983
திரு.சத்யராஜ்ராமநாதபுரம்9047808608
திரு.காலேஷ்வரன்ராமநாதபுரம்7867065990
திரு.காஞ்சி பாலா கோன்சிவகங்கை9943813544
திரு.சண்டியர் பாலா யாதவ்புதுக்கோட்டை7373908488
திரு.நவநீதகிருஷ்ணன்விழுப்புரம்
திரு. க.குணசேகர்விழுப்புரம்9597275229 & 8675556824
திரு.ராஜேஷ் குமார்திண்டுக்கல்9626104115
திரு.பாஸ்கர்திருநெல்வேலி9500001016
திரு.பவுல்துரை யாதவ்திருநெல்வேலி9994737559 & 9842420559
திரு.ஏஆர் .கண்ணன் யாதவ்புதுக்கோட்டை9943055190
திரு.மோகன்ராஜ்புதுக்கோட்டை9047744722
திரு.எஸ். யாதவன்வேலூர்9500001016
திரு.சந்தோஷ் குமார்.Vநாகப்பட்டினம்9488730800
திரு.துளசி யாதவ்கன்னியாகுமரி8489133681
திரு.கார்த்திக் யாதவ்திருவள்ளுர்
திரு.தினேஷ் குமார்கடலூர்9791440025
திரு.ராஜதுரைகடலூர்9751605414
திரு.செல்வமணி யாதவ்மதுரை9787265923
திரு.தமிழ்வேந்தன் யாதவ்அரியலூர்9786781616
திரு.சங்கர்தூத்துக்குடி
திரு.ரமேஷ்பெரம்பலூர்9543980767
திரு.கலைவாணன்கோயம்புத்தூர்7418231375
திரு.ராம் சந்தரன் யாதவ்விருதுநகர்9894326989
திரு.திராவிடமணி யாதவ்திருவாரூர்8012223364

பெயர்ஊர்தொலைபேசி எண்
திரு.செந்தில்துபாய்

அனைவரும் வருக

இந்த இணையத்தளத்திக்கு மாவட்டம் வாரியாக உறுப்பினர்கள் சேர்க்கபடுகிறது. விருப்பம் உள்ளவர்கள் தங்கள் பெயர்,மாவட்டம்,கிராமம்,தொலைபேசி எண் உள்ளிட்டவற்றை tamilyadavs@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவம்

Monday, July 21, 2014

Join to all Yadav ! Welcome to all Yadav!!

நமது சமுதாயத்தில் நடக்கும் குடும்ப விழாக்கள் திருவிழாக்கள் மற்றும் யாதவா பொதுக்கூட்டங்கள் போன்றவைகள் எங்களுக்கு அனுப்புங்கள் அதை இணையதளத்தில் வெளியிடுவோம்
தொடர்புக்கு
tamilyadavs@gmail.com
7200671482
9884774983

Friday, July 18, 2014

ஜீலை 20 சங்கை ஆண்ட சிங்கம் மாவீரன் செ.குருசாமி யாதவ் அவர்களின் நினைவு நாள்

சங்கையை ஆண்ட எங்கள் சிங்கம்
யாதவ குல தங்கம்
உன் நினைவு நாளே
எங்கள் எழுச்சி திருநாள்
ஆம் மாவீரன் குருசாமி யாதவ்
அவர்களின் நினைவு நாளே
யாதவ இளைஞர்களின் எழுச்சி நாள்

யாதவ சிங்ககளே மாவீரன் விழவில்லை நம்முடன் வாழ்ந்து கொண்டுதான் உள்ளார்.
அன்று வீழ்ந்த்து ஒரு குருசாமி இன்று வாழ்வது 1000 குருசாமி.
யாதவ இன எழுச்சி நாளில் சபதம் ஏற்போம்.
 ஒன்று படுவோம் வென்று காட்டுவோம்

யாதவர் லட்சியம்! வெல்வது நிட்சயம்!
ஓங்குக மாவீரனின் புகழ்! வாழ்க யாதவர் குலம்!!


மண்டல் யாதவ் அவர்களின் 96வது பிறந்த நாள் விழாவானது 25 ஆகத்து 2014 அன்று தமிழ்நாடு யாதவர் சங்கம் சார்பாக கொண்டாடப்பட உள்ளது

பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 25 % கூடுதல் இடஒதுக்கீட்டினை பெற்றுத்தந்த மேதை பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் யாதவ் அவர்களின் 96வது பிறந்த நாள் விழாவானது 25 ஆகத்து 2014 அன்று தமிழ்நாடு யாதவர் சங்கம் சார்பாக கொண்டாடப்பட உள்ளது ... ஒவ்வொரு ஆண்டும் தமிநாடு யாதவர் சங்கம் மண்டல் அவர்களின் பிறந்த நாளினை கொண்டடிவருவது குறிப்பிடத்தகுந்தது. இதே போன்று அனைத்து யாதவ மக்களும் தலைவர்களும் மற்றும் பிற்படுத்தப் பட்ட வகுப்பை சார்ந்த அனைத்து மக்களும் மண்டல் அவர்களின் பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்



Wednesday, July 16, 2014

அல்வா கூட கிடைக்காது: லல்லு பிரசாத் யாதவ் கிண்டல்


வெளிநாட்டு முதலீட்டாளர்களால் இந்திய மக்களுக்கு அல்வாகூட கிடைக்காது என்று ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லல்லு பிரசாத் யாதவ் கூறினார். 


இந்தியாவில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் குறித்து லல்லுபிரசாத் யாதவ் கிண்டல்!இதுதொடர்பாக ராஞ்சியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- 

ரெயில்வே மற்றும் பாதுகாப்புத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை கொண்டு வருவதற்கு நரேந்திர மோடி அரசு பொதுமக்கள் தனியார் பங்களிப்பு என்ற புல்லாங்குழலை வாசித்து வருகிறது. வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு பணத்தை சம்பாதித்துவிட்டு லாபத்துடன் சென்றுவிடும். உங்களுக்கு (பொதுமக்கள்) அல்வாகூட கிடைக்காது. 

ஷாங்காய் போன்ற 100 நகரங்களை உருவாக்க திட்டமிட்டிருக்கிறார்கள். ஒட்டுமொத்த ஆண்டு பட்ஜெட் போன்று அதிக செலவாகும் என்பதால் ஷாங்காய் போன்ற ஒரு நகரை கட்டமைப்பதே கடினம். 

புல்லட் ரெயில் திட்டம் அகமதாபாத்-மும்பை இடையே அறிமுகம் செய்யப்படும் என்று பட்ஜெட்டில் உள்ளது. அந்த பகுதி மட்டும்தான் உண்மையான இந்தியா என்று நினைக்கிறார்கள். இது மக்களை மீண்டும் முட்டாளாக்கும் செயல். விலைவாசியை கட்டுப்படுத்துவோம் என்று தேர்தலுக்கு முன்னதாக பா.ஜனதா வாக்குறுதி அளித்தது. இப்போது தக்காளி விலை கிலோ ரூ.60க்கு சென்றுவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாட்டு இடையன்களின் கிளைகள்

1.கரிகாலன் இடையன்
2.புதுநாட்டு இடையன்
3.சிவத்த இடையன்
4.கருத்த இடையன்
5.கல்லுகட்டி இடையன்
6.சாம்பார் இடையன்
7.அப்பச்சி இடையன்
8.செம்பலங்குடி இடையன்
9.தெலுங்கு இடையன்
10.உள்நாட்டு இடையன்
11.அரசன் கிளை இடையன்
12.வருதாட்டு இடையன்
13.பெரிய இடையன்
14.ஆட்டு இடையன்
15.சீவ இடையன்
16.புதுக்கண் நாட்டார் நம்பியார்
17.கருத்தமணி இடையன்
18.பால் இடையன்
19.மோர் இடையன்
20.நம்பி இடையன்
21.பாசி இடையன்
22.சிவார் இடையன்
23.கொள்ளு இடையன்
24.வடுக இடையன்
25.மொட்ட இடையன்
26.தலைப்பா கட்டு இடையன்
27.நாட்டு இடையன்
28.நார்கட்டி இடையர்
29.பால்கட்டி
30.பஞ்சாரம் கட்டி
31.சிவியர்
32.சோழியாடு
33.இராமக்காரர்
34.பூச்சுக்காரர்
35.கொக்கிக்கட்டி

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar